பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கடட் ளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 ஓகத்து 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2017 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கேப்பிரசேன் பிஎல்சி முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.
இவ்வொழுங்குபடுத்தல் நடவடிக்கைகளானது, அரச பிணையங்கள்சந்தையில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டுடன் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசனின் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையிலானதாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் அட்டவணை II இல் குறிப்பிட்டவாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கி ஒன்றாக வங்கித்தொழில் நடவடிக்கைகளைக் கொண்டு நடத்துவதற்கான பான் ஏசியா பாங்கிங் கோப்ரேசன் லிமிடெட்டின் ஆற்றலினை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதனை பொதுமக்களுக்கு அறிவித்துகn; காள்ள இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது. இதன்படி, பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியானது வங்கித் தொழில் சட்டத்தின் அட்டவணை II கீழ் அனுமதிக்கபப்ட்ட அளவிற்கு அரச பிணையங்களின் அணுகுதலைத் தொடரலாம். அரச பிணையங்கள் சந்தையில் பான; ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் வாடிக்கையாளர்களினதும் இணையத்தரப்பினர்களினதும் நலவுரித்துக்களை ஒழுங்கானதொரு விதத்தில் பாதுகாக்க இலங்கை மத்திய வங்கியினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வொழுங்குப்படுத்தல் நடவடிக்கைகளானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களுக்கான பான் ஏசியா பாங்கிங் கோப்ரேசன் பிஎல்சியின் அணுகுமுறையினை கட்டுப்படுத்துகின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி வழியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகள்/ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது