பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர் குழுவானது பொருளாதாரச் செயலாற்றம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான நான்காவது மீளாய்விற்குத் துணைபுரிகின்ற கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டது.
உலகளாவிய நிச்சயமற்றதன்மையானது தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்படுவதுடன் நிதியியல் சந்தைத் தளம்பலிற்குப் பங்களிக்கின்றது. அரசாங்கமானது நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள்கள் குறித்து தொடர்ந்தும் அர்ப்பணிப்புடனுள்ளதுடன் நடைமுறைப்படுத்தலானது வலுவானதாகவும் பாராட்டத்தக்கதாகவும் காணப்படுகின்ற போதிலும், வெளிநாட்டு அதிர்வின் இலங்கைக்கான தாக்கங்களை மதிப்பிடுவதற்கு அதிகளவிலான காலம் தேவைப்படுகின்றது.
அதிகரித்தளவிலான உலகளாவிய நிச்சயமற்றதன்மையினைக் கொண்டுள்ள இக்காலப்பகுதியில் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான சீர்திருத்த உத்வேகத்தினைப் பேணும் வழி அலகுகள் மற்றும் கொள்கைகள் குறித்து அண்மைய காலத்தில் உடன்பாட்டினை எட்டுவதுடன் தொடர்புடைய கலந்துரையாடல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.