இலங்கை, பணம் தூயதாக்கல் மீதான ஆசிய/ பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தினை ஆசிய பசுபிக் குழுமத்தின் 41 உறுப்பு நாடுகளிலிருந்தான 408 பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு பன்னாட்டு அவதானிப்பாளர் நிறுவனங்களிலிருந்தான 24 அவதானிப்பாளர்கள் ஆகியோரின் பங்குபறற் லுடன் 2017 யூலை 15 - 21 வரை கொழும்பில் நடாத்தியிருந்தது. இந்த நிகழ்விற்கு அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றவியல் குற்றங்கள் போன்றவற்றை ஒழித்தல் தொடர்பில் இலங்கையின் தேசியக் கடப்பாடுகள் பற்றி அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் வலியுறுத்தினர். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆர்வலர்களுக்கிடையான பலமானதும் வினைத்திறனுடன் கூடியதுமான ஒத்துழைப்புக்கான இன்றியமையாத தேவைப்பாடு பற்றியும் அதிமேதகு சனாதிபதி அவர்களால் மேலும் குறித்துக்காட்டப்பட்டது.
1997இல் தாய்லாந்தின் பாங்கொக்கில் உருவாக்கப்பட்ட ஆசிய பசுபிக் குழுமத்தின் பதின்மூன்று நாடுகளில் இலங்கையும் காணப்படுகிறது. மிகப்பெரிய நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழு மாதிரியினைக் கொண்ட பிராந்திய அமைப்பாக இருக்கும் ஆசிய பசுபிக் குழுமத்திடம் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாததத்pற்கு நிதியிடலுக்கெதிரான, குறிப்பாக, உறுப்பு நாடுகளிடையேயான நிதியியல் நடவடிக்கைச் செயலணிக் குழுவின் நாற்பது (40) விதந்துரைப்புக்கள் தொடர்பில் பன்னாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களைக் காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தபடுவதனையும் வலுவுக்கிடுவதனையும் கண்காணிக்கும் பணி ஒப்படைகக்ப்பட்டது.
இவ்வருட ஆண்டுக் கூட்டத்தில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாததத் pற்கு நிதியிடலை ஒழித்தல் மதிப்பீடுகள், அறிக்கைளைப் பின்பற்றுதல், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒப்புதல்களை வழங்குவதற்காக உரிய நாடுகளின் செயல் திட்டங்களுடன் கூடிய 31 நாடுகளின் அறிக்கைளை ஆராய்தல் போன்றவை கலந்தாலோசிக்கப்பட்டது. பூட்டான் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் சீனாவின் பணம் தூயதாக்கலை தடுப்பதறக்hன கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு நிலையம் போன்றவற்றுடன் இலங்கை கையொப்பமிட்ட இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடங்கலாக உளவறிதல்/ தகவல் பகிர்தலுக்காக உறுப்பு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடும் நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது.
இக்கூட்டமானது நாடுகளுக்கிடையே பரந்தளவிலான தடுப்பு வழிமுறைகள், நிறுவன ரீதியான தேவைப்பாடுகள், விடயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் வழக்குத; தொடுத்தல், குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்பான பணத்தினை முடக்குவதற்கும் பறிமுதல் செய்வதற்கும் பரஸ்பர சட்ட உதவியையும் பன்னாட்டு ஒத்துழைப்பையும் பெறுவதற்கான கடப்பாடுகள் போன்றவற்றினை ஒப்பந்தம் செய்துகொள்ள வசதியளிக்கின்றது. ஆசிய பசுபிக் குழுமத்தின் ஆண்டுக் கூட்டமானது அதன் உறுப்பினர்களுக்காக தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயிற்சிகளை நாடுவதற்கான தளத்தினை வழங்கிய வேளையில் நாடுகள் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத்திற்கு நிதியிடலின் போக்கு, முறைகள், இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கக்கூடிய தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் மரபு முறைசார்நத் கோட்பாடுகளை ஆராய்வதற்கான விழிப்புணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
வட ஆசியா, தென்கிழக்காசியா, பசுபிக், தெற்காசியா மற்றும் கன்செஸ் (கனடா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கா) போன்றவற்றின் குழு மற்றும் துணைப் பிராந்தியக் குழுக்களின் கூட்டங்களும் இவ்வார காலப்பகுதியில் நடைபெற்ற வேளையில் 2017 யூலை 15 - 16 திகதிகளில் ஆண்டுக்கூட்டத்தின் முன் முழுமை அமர்வு முடிவுறுத்தப்பட்டது. ஆண்டுக் கூட்டத்தின் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் அமர்வு காலப்பகுதியில் நிதியியல் நடவடிக்கைச் செயலணிக்குழு, பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் அமைப்பு, போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகம், பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்காக ஐரோப்பிய குழு போன்றவற்றிலிருந்தான பன்னாட்டு அவதானிப்பாளர் அனைவரும் ;நெருக்கமாக பங்களித்தனர்.
ஆசிய பசுபிக் குழுமத்தின் 20ஆவது ஆண்டுக் கூட்டம் 2017 யூலை 21இல் வெற்றிகரமான குறிப்பின் மூலம் முடிவுறுத்தப்பட்டது.