திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறைமை

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. 2017 யூலை 27 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், 2015 பெப்புருவரியிலிருந்து நடைமுறையில் காணப்படும் திறைசேரி முறிகளுக்கான முழுமையான ஏல அடிப்படையிலான வழங்கல் முறைமைக்கு பதிலாக இந்த புதிய முறைமை மாற்றியமைக்கப்படுகின்றது. புதிய முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கான பிரதான காரணமானது அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகளின் போது வினைத்திறனையும் வெளிப்படைத் தன்மையினையும ;மேலும் அதிகரிப்பதாகும். 

இந்த புதிய முறைமையானது மிகவும் கடட் மைப்பானதாக காணப்படுவதுடன் ஒழுங்கான மாதாந்த திறைசேரி முறிகளின் வழங்கல்களை உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு மாதாந்த வழங்கலானது இரண்டு வேறுபட்ட முதிர்ச்சிகளை கொண்ட முறித் தொடர்களினை வழங்குவதுடன், தொடர்களின் முதிர்ச்சிக் காலப்பகுதியானது சந்தையில் கிடைக்கத்தக்க வளங்களுடன் ஒத்துப்போவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒவ்வொரு தொடர்களின் கீழான வழங்கலானது, ஒவ்வொரு அடுத்துவரும் கட்டங்களின் வெளியீடுகளினைப் பொறுத்து மூன்று அல்லது அதற்கு குறைவான தொடர்ச்சியான கட்டங்களில் தாக்கத்தினைக் மேற்கொள்கிறது. கட்டம் I ஆனது நியாயமான சந்தைக் கோரல்களினூடாக போட்டித்தன்மையுடைய பல்விலை ஏல முறைமையொன்றினால் அறிவிக்கப்பட்ட முழு தொகைகளின் வழங்கலினை ஆராயும். எனினும், கட்டம் I இல் ஏதேனும் குறைவான ஒதுக்கீடுகள் காணப்படுகையில், கட்டம் II ஆனது தன்னார்வ வெளியீடு அடிப்படையிலான கோரல்களுக்காக திறக்கப்படும். கட்டம் II இன் கீழான வழங்கலானது கட்டம் I இல் தீர்மானிக்கப்பட்ட நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதத்தில் உருவாக்கப்படுவதுடன், கட்டம் I இல் காணப்படும் ஏதேனும் குறைவான ஒதுக்கீடுகளுக்கு வரையறுக்கப்படும். மேலதிகமான கேள்வியின் போது, கட்டம் II இன் வழங்கலானது, கட்டம் I இன் ஏல பங்கேற்பாளர்களின் செயலாற்றத்திற்கான விளைவு விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும். முதனிலை வழங்களிலுள்ள அனைத்து முதனிலை வணிகர்கள் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் கட்டம் II இன் கீழ் கோரல்களை சமர்ப்பிப்பதற்கு தகுதியானவர்கள். 

கட்டம் III இல், கட்டம் I மற்றும் கட்டம் II இல் ஏதேனும் குறைவான ஒதுக்கீடுகள் காணப்பட்டால், முதனிலை வணிகர்களுக்கிடையில் மட்டும் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதத்தில் கட்டாய அடிப்படையில் வழங்கப்படும். எனினும், கட்டம் III இன் நிறைவேற்றுதலானது கட்டம் I இன் வழங்கப்பட்ட தொகையின் குறைந்தது 60 சதவீத ஏற்புகள் காணப்படும் சந்தர்ப்பங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும். எந்தவொரு முதனிலை வணிகர்களுக்கான கட்டம் III இலான வழங்கலானது கட்டம் I மற்றும் கட்டம் II போன்றவற்றின் வெற்றிகர வழங்கல்களின் சதவீதத்தின் எதிர்மறையான விகிதாசாரமாக இருக்கும்.

மேலும், ஓர் புதிய செயலாற்ற மீளாய்வு பொறிமுறையானது முதனிலை வணிகர்களின் காத்திரத்தன்மையான பங்கேற்பினை மதிப்பிடுவதற்காக அறிமுப்படுத்தப்படும். 

அதேவேளை, முதனிலை வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் முதலீட்டு திட்டமிடலினை பெருமளவில் முன்னேற்றும் நோக்குடன் ஓர் காலாண்டு அடிப்படையிலான திறைசேரி முறிகளின் ஏல நாட்காட்டி இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்தில் முன்கூட்டியே வெளியிடப்படும்.

 

Published Date: 

Tuesday, July 25, 2017