இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களின்படி, 4,630 வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட சில வங்கித்தொழில் தகவல்களுடன் தொடர்புடைய இச்சம்பவமானது கவனக் குறைவினால் ஏற்பட்டதாகவே தோன்றுகின்றது என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தர விரும்புகின்றது. மேலும், இச்சம்பவத்திற்கு ஹற்றன் நஷனல் வங்கிக்குள் வாடிக்கையாளர் தகவல்களை முகாமை செய்வதிலும் பயன்படுத்துவதிலும் காணப்படும் உள்ளகக் குறைபாடுகளே காரணமென அவதானிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இவ்விடயமானது, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி இரண்டினாலும் மேலதிக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
இதன்படி, சட்ட ஏற்பாடுகள் அத்துடன் தொடர்பான மேற்பார்வை நியமங்களின் நியதிகளில் இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்காக இடைக்கால மேற்பார்வை வழிமுறைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.