ஆசியத் தீர்ப்பனவு ஒன்றிய பணிப்பாளர்கள் சபையின் 46ஆவது கூட்டம் - கொழும்பு இலங்கை, யூலை 12 - 13, 2017

இலங்கை மத்திய வங்கி 2017 யூலை 12ஆம் திகதி துணைநில் தொழில்நுட்ப கூட்டத்தினையும் 2017 யூலை 13ஆம் திகதி ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் பணிப்பாளர்கள் சபைக் கூட்டத்தினையும் நடாத்தியிருந்தது.

ஆசிய தீர்ப்பனவு ஒன்றியமானது தற்போது ஒன்பது மத்திய வங்கிகள்ஃ நாணய அதிகாரங்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. வங்காளதேசம், பூட்டான், இந்தியா, ஈரான், மாலைதீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் தற்போதைய உறுப்பு நாடுகள் ஆகும். ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் பணிப்பாளர்கள் சபையானது இத்தகைய நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்களைஃ நாணய அதிகாரங்களின் தலைவர்களை கொண்டுள்ளது. பணிப்பாளர் சபைக்குப் பொறுப்பான செயலாளர் நாயகத்தின் கீழ் ஆசிய தீர்ப்பனவு ஒன்றியம் செயற்படுவதுடன் இதன் செயலகம் ஈரான் திகிரனில் அமைந்துள்ளது.

1974இல் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் முக்கிய தொழிற்பாடாக இரண்டு மாத காலப்பகுதிக்குள் ஐ.அ.டொலரிற்கான தேறிய தீர்ப்பனவு மூலம் உறுப்பினர் நாடுகளின் பல்புடை அடிப்படையில் வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சார்ந்த கொடுக்கல்வாங்கல்களுக்கான கொடுப்பனவுகளை தீர்ப்பனவு செய்வதற்கு வசதிகளை வழங்குதல் காணப்படுகிறது. ஆசிய தீர்ப்பனவு ஒன்றியமானது, பங்கேற்பாளர்களுக்கிடையில் நாணய ஒத்துழைப்பினை மேம்படுத்துதல் மற்றும் உறுப்பினர் நாடுகளில் வங்கித்தொழில் முறைமைகளிடையே நெருங்கிய தொடர்புகளை விருத்தி செய்வதன் மூலம் உறுப்பினர் நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை மேம்படுத்தல் போன்றவற்றுக்கும் உதவுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் பணிப்பாளர்கள் சபையின் 46ஆவது கூட்டத்திற்கு தலைமை தாங்கியவேளையில் 2017 யூலை 12இல் நடைபெற்ற ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் துணைநில் தொழில்நுட்ப குழுக் கூட்டத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர் திரு. பி. சமரசிறி அவர்கள் தலைமை தாங்கினார்.

பணிப்பாளர்கள் சபையானது ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் உறுப்பினர்களிடையே பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகம் போன்றவற்றின் மேலதிக ஒருங்கினைப்பு தொடர்பில் கருத்தில் கொண்டது. இது தொடர்பில், அதன் எதிர்கால தொழிற்பாடுகளுக்காக கீழ்வரும் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புக்கள் பணிப்பாளர் சபையினால் பின்பற்றப்பட்டன.

  • தற்போதைய தீர்ப்பனவு நாணயங்களை பன்முகப்படுத்துவதற்காக ஆசிய தீர்ப்பனவு ஒன்றியப் பொறிமுறைக்குள் யூரோவினை மீள இணைத்தலும் யப்பான் யொன்னினை சேர்த்தலும்.
  • ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் பொறிமுறைக்குள் இலத்திரனியல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதற்காக தேசிய வங்கித்தொழில் அட்டை ஆழியினை ஆரம்பித்தல்.
  • தேறிய தீர்ப்பனவுகளுக்காக தற்போதுள்ள ஆசிய தீர்ப்பனவு ஒன்றிய பொறிமுறைக்கான தீர்ப்பனவு நாணயங்களாக உறுப்பு நாடுகளின் உள்நாட்டு நாணயங்களை உள்ளடக்குதல்.
  • ஆசிய தீர்ப்பனவு ஒன்றிய கொடுக்கல்வாங்கல்களின் கணக்கீட்டுக்காக வெப் அடிப்படையிலான தகவல் முறைமையொன்றினை நடைமுறைக்கிடல்.
  •  ஈரானுடனான கொடுக்கல்வாங்கல்களை மீள ஆரம்பிப்பதற்கு வசதியளிப்பதனை தொடர்ந்து ஆசிய தீர்ப்பனவு ஒன்றிய பொறிமுறையின் கீழ் அதன் தடைகளை நீக்குதல்.
  • பிராந்தியத்தின் மிக உயர்வான பொருளாதார ஒத்துழைப்புக்களுக்காக ஆசியான் நாடுகளை உள்ளடக்குவதற்காக ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தினை ஊக்குவித்தல்.

மேலும், 2016இல் மியன்மாரில் நடைபெற்ற 45ஆவது பணிப்பாளர் சபைக் கூட்டத்தின் தீர்மானத்தின் படி கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளுக்கான சைபர் பாதுகாப்புக்களின் முக்கியத்துவமானது இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. பணிப்பாளர் சபையானது ஆசிய தீர்ப்பனவு ஒன்றியத்தின் தொழிற்பாடுகளை மீளாய்வதற்காகவும் உறுப்பு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் நிதியியல் ஒருங்கினைப்பினை மேலும் பலப்படுத்தவதற்கான தீர்மானங்களை பின்பற்றுவதற்காகவும் வருடாந்தம் சந்திக்கின்றது. 47ஆவது வருடாந்த கூட்டம் நேபாளத்தில் நடைபெறும்.

 

Published Date: 

Friday, July 14, 2017