இலங்கை மத்திய வங்கி 2017 யூலை 12ஆம் திகதி கொழும்பில் 34ஆவது சார்க்நிதியிடல் குழுக்கூட்டம் மற்றும் சார்க்நிதியிடல் ஆளுநர்களின் கருத்தரங்கை நடாத்தியிருந்தது. 34ஆவது சார்க்நிதியிடல்குழுக் கூட்டத்தில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள், மத்திய வங்கிகள் மற்றும் நிதிஅமைச்சிலிருந்தான ஏனைய பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
சார்க்நிதியிடல் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, “உலகளாவிய நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் சார்க்பிராந்தியத்திற்கான சவால்கள் மற்றும் இத்தகைய இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கான சாத்தியமானகொள்கை வழிமுறைகள்” என்ற தொனிப்பொருளில் இலங்கை மத்திய வங்கியின் ஜோன் எக்ஸ்டர்பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் சார்க்நிதியிடலின் ஆளுநர்களின் கருத்தரங்கு இடம்பெற்றது.கருத்தரங்கில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால்பிரதான உரை வழங்கப்பட்டது. ஒவ்வொரு சார்க் நாடுகளும் உலகளாவிய நிச்சயமற்றதன்மையின்காரணமாக அந்நாடுகளின் மீதான தாக்கம் மற்றும் இத்தகைய இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கானசாத்தியமான கொள்கை வழிமுறைகளை அடையாளப்படுத்தி சமர்ப்பிப்பொன்றை வழங்கியிருந்தன. “சார்க்பிராந்தியத்தின் நிதியியல் உள்ளடக்கம்” என்பதன் மீதான சார்க்நிதியிடலின் ஒன்றிணைந்த ஆராய்ச்சிக்கற்கையின் ஆரம்பப் பெறுபேறுகளும் இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
2002 யூன் மாதத்தில் காத்மண்டுவில் இடம்பெற்ற அமைச்சர்கள் சபையின் இருபத்திரண்டாவது அமர்வில்ஒப்புதலளிக்கப்பட்டதும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மற்றும் சார்க் அங்கத்துவ நாடுகளின் நிதிச்செயலாளர்கள் ஆகியோரின் மட்டத்திலான நிரந்தரமானதொரு நிறுவனமே சார்க்நிதியிடலாகும். பேரண்டப்பொருளாதாரக் கொள்கைகள் மீதான நெருங்கிய தொடர்புத்தன்மையை உருவாக்கும் நோக்கில் சார்க்அங்கத்துவ நாடுகளின் மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சர்கள் என்பவற்றிற்கிடையேஒருங்கிணைப்பை மேம்படுத்தல் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல் என்பனவே சார்க்நிதியிடலின்குறிக்கோளாகும். சார்க்நிதியிடலின் கூட்டங்கள் ஆண்டொன்றிற்குக் குறைந்தது இரண்டு தடவைகள்இடம்பெறுவதுண்டு. சார்க்நிதியிடலானது சார்க்நிதி அமைச்சர்களினூடாக அமைச்சர்களின் சார்க் சபைக்குஅறிக்கையொன்றை சமர்ப்பிக்கின்றது.