இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துவதன் மூலமாக ஒற்றைக் கொள்கை வட்டி வீத பொறிமுறையொன்றினை நடைமுறைப்படுத்துகின்றது

ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் திட்டமிடப்பட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் சனவரி 2024இல் இலங்கை மத்திய வங்கியின்; ஆண்டுக்கான கொள்கை அறிக்கையிலும் அதனை தொடர்ந்து 2024 செத்தெம்பரிலும் அறிவிக்கப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 27இலிருந்து இரட்டைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தது. இது மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மேம்பாட்டை குறிக்கிறது. இதற்கமைய, மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை சமிக்ஞை செய்வதற்கும் தொழிற்படுத்துவதற்கும் அதன் முதன்மை நாணயக் கொள்கைக் கருவியாக ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துகிறது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக்; கொள்கை நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறித்துக்காட்டி தொடர்பூட்டுவதற்கு ஓரிரவு கொள்கை வீதமானது காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப சீராக்கப்படும். இந்த மாற்றம், நிதியியல் சந்தைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை சமிக்ஞையிடலின் வினைத்திறன் மற்றும் செயற்றிறனையும் ஊடுகடத்தலையும் மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முழு வடிவம்

Published Date: 

Tuesday, November 26, 2024