பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுமத்தின் 20ஆவது ஆண்டுக் கூட்டம் கொழும்பு, இலங்கையில் யூலை 17 – 21, 2017 வரை நடைபெறும்

பணம் தூயதாக்கல் தொடர்பான ஆசியபசுபிக்கின் 20ஆவது ஆண்டுக் கூட்டம் 2017 யூலை 17 – 21காலப்பகுதியில் கொழும்பில் 41 உறுப்பு நாடுகள் மற்றும் பல பன்னாட்டு அவதானிப்புநிறுவனங்களிலிருந்தான ஏறத்தாழ 450 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்நடாத்தப்படவுள்ளது. மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதன்மை விருந்தினராக கலந்துசிறப்பிப்பார்.

ஏபிஜி எனப் பொதுவாக அறியப்படும் பணம் தூயதாக்கல் மீதான ஆசியÆ பசுபிக் குழுமம் ஆரம்பத்தில்1997இல் தாய்லாந்தின் பாங்கொங்கில் இலங்கை உட்பட பதின்மூன்று நாடுகளின் பங்களிப்புடன்ஆரம்பிக்கப்பட்டது. பிராந்திய அமைப்பாக இருக்கும் ஆசிய பசுபிக் குழுமத்திடம் பணம் தூயதாக்கல்மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடுதலுக்கெதிரான, குறிப்பாக, உறுப்பு நாடுகளிடையேயான நிதியியல்நடவடிக்கை செயலணிக் குழுவின் நாற்பது (40) விதந்துரைப்புக்கள் தொடர்பில் பன்னாட்டுஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களைக் காத்திரமான முறையில் நடைமுறைப்படுத்தபடுவதனையும்வலுவுக்கிடுவதனையும் கண்காணிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. தற்பொழுது, ஆசிய பசுபிக் குழுமம்பசுபிக்கிலுள்ள சிறிய பொருளாதாரங்களிலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீன, யப்பான் மற்றும் இந்தியாபோன்ற பாரிய பொருளாதாரங்கள் வரையான வேறுபட்ட உறுப்புரிமை நாடுகளை உள்ளடக்கியிருக்கிறது.இந்நிரந்தர உறுப்பு நாடுகளுக்குப் புறம்பாக, இவ்வாண்டில் ஆசிய பசுபிக் குழுமத்தின் ஆண்டுக்கூட்டத்தில் நிதியியல் நடவடிக்கை செயலணிக்குழு, பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு போதைப்பொருள் மற்றும் குற்றம்தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் நிதியியல் உளவறிதல்பிரிவின் எக்மன்ட் குழுமம் போன்றவற்றின் பன்னாட்டு மற்றும் பிராந்திய அவதானிப்பாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆசிய பசுபிக் குழுமம் மிகப் பெரிய நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழு மாதிரியினைக் கொண்டஉலகின் பிராந்திய அமைப்பொன்றாக விளங்குவதனால் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்குநிதியிடலை ஒழித்தல் தொடர்பில் என்றும் மாற்றமடைந்து வருகின்ற உலகளாவிய தோற்றப்பாட்டில் மிகமுக்கியமான வகிபாகமொன்றினை வகிக்கின்றது. 2012இல் நிதியியல் நடவடிக்கை செயலணிக் குழுவினால்பின்பற்றப்பட்ட 40 விதந்துரைப்புக்களில் புதுப்பிக்கப்பட்ட வாசகத்தின் பின்னணியில், ஆசிய பசுபிக்குழுமம் உறுப்பு நாடுகளின் பரஸ்பர மதிப்பீடுகளினூடாக பணம் தூயதாக்கலுக்கெதிரானபயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல், இணங்குவிப்புக்கள், பரந்தளவிலான தடுப்பு வழிமுறைகள், நிறுவன ரீதியான தேவைப்பாடுகள், விடயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல், துறைவாரியான கட்டுப்பாடுகள், குற்ற நடவடிக்கைகளுடன் தொடர்பான பணத்தினை முடக்குவதற்கும்பறிமுதல் செய்வதற்கும் பரஸ்பர சட்ட உதவியையும் பன்னாட்டு ஒத்துழைப்பையும் பெறுவதற்கானகடப்பாடுகளையும் மதிப்பீடு செய்கிறது. பரஸ்பர மதிப்பீடுகளுக்குப் புறம்பாக, ஆசிய பசுபிக் குழுமம் பணம்தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலின் போக்கு, முறைகள், இடர்நேர்வு மற்றும்பாதிக்கப்படக்கூடிய தன்மை போன்ற விடயங்களில் ஆசிய பசுபிக் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும்குறிப்பாக, தொழில்நுட்ப உதவிகள் மற்றும் பயற்சிகளையும் மரபுமுறைசார்ந்த கோட்பாடுகளைஆராய்வதற்குச் சிறந்த தகவல்களை வழங்குவதற்கும் ஆசிய பசுபிக் குழுமமும் ஆதரவளிக்கும். ஆசியபசுபிக் குழுமம் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்காகமூலவளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்காக தேசிய இணைப்புப் பொறிமுறைகளைநிறுவுவதற்கு அதன் உறுப்பினர்களுக்கு உதவும்.

20ஆவது ஆண்டுக் கூட்டம் பன்னாட்டு ஒத்துழைப்பினைப் பலப்படுத்திக் கொள்வதற்கும் பணம்தூயதாக்கலுக்கெதிரானÆ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலில் காணப்படும் பலயீனங்களைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பயனுள்ளதாக அமையும்.2016 – 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை ஆசிய பசுபிக் குழுமத்தின் இணைத் தலைமைநாடாக இருப்பதனால் ஆண்டுக் கூட்டம் இலங்கைக்கு முக்கியமானதாகவுள்ள வேளையில், நாடானதுபன்னாட்டு பணம் தூயதாக்கலுக்கெதிரானÆ பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் நியமங்களைஎய்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதன் கடப்பாடுகளை மேலும்காட்டமுடியும்.

ஆண்டுக் கூட்டத்தின் முன்நிறைவுக் கூட்டத் தொடர் 2017 யூலை 15ஆம் திகதியில் கிழமையிலிருந்துஆரம்பிப்பதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.

 

Published Date: 

Thursday, July 13, 2017