இலங்கை மத்திய வங்கி, 2024ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கிறது

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 70(1)இன் நியதிகளில் இலங்கை மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டிற்கான நிதியியல் உறுதித்தன்மை மீளாய்வினை வெளியிட்டிருக்கின்றது. இச்சட்டரீதியான அறிக்கை, நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான கணிப்பீட்டுடன் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பாதிக்கப்படும் தன்மைகள் என்பனவற்றை அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்வதோடு மத்திய வங்கி மற்றும் ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல்  அதிகாரசபைகளினால் செயற்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகளையும் மேற்கோடிடுகிறது.

2024ஆம் ஆண்டின் யூன் வரையான தரவுகளை அறிக்கை உள்ளடக்குகின்றது. எனினும், மேலும் இற்றைப்படுத்தப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட அபிவிருத்திகளையும் இவ்வெளியீடு அறிக்கையிடுகிறது.

முழுவடிவம்

Published Date: 

Friday, October 11, 2024