கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 யூனில் 59.5 சுட்டெண் பெறுமதியினை அடைந்து, மூன்றாவது தொடர்ச்சியான அளவீட்டுச் சுற்றுக்களில் அதன் அதிகூடிய சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. தொழிற்துறையானது பல்தரப்பு முகவராண்மைகள் மூலம் நிதியளிக்கப்பட்ட குறிப்பாக, வீதிப் புனரமைப்பு மற்றும் நீர் விநியோகத்துடன் தொடர்புபட்ட கருத்திட்டங்கள் மூலம் பிரதானமாக தூண்டப்பட்டிருந்ததென அநேகமான பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.
புதிய கட்டளைகள் யூனில் உயர்வான வீதத்தில் அதிகரித்து, எதிர்கால தொழிற்துறைச் செயற்பாட்டிற்காக சாதகமான எதிர்பார்க்கையினை எடுத்துக்காட்டியது. எனினும், மாதகாலப்பகுதியில் தொழில்நிலை முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதமாயினும் சுருக்கமடைந்தே காணப்பட்டது. அதேவேளை, உள்ளீட்டுப் பொருட்களுக்கான கேள்வியில் அதிகரிப்புடன் கொள்வனவுகளின் அளவு அதிகரித்தது. மேலும், கட்டடவாக்கப் பொருட்களின் அநேகமானவற்றின் விலைமட்டங்கள் வீழ்ச்சியடைந்த போக்கில் காணப்படுகின்றதென பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். அதேவேளை நிரம்பலர் விநியோக நேரம் யூனில் மேலும் நீட்ச்சியடைந்தது.