இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 யூலை 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதத்திற்கும் 9.25 சதவீதத்திற்கும் 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது.

நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட மட்டத்தில் பேணுகின்ற அதேவேளை பொருளாதாரம் அதன் முழுமையான இயலளவினை அடைவதை இயலச்செய்யும் நோக்கில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைமைகள் தொடர்பிலான தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சாத்தியமான இடர்நேர்வுகள் மற்றும் நிச்சயமற்றதன்மைகள் என்பவற்றினைக் கவனமாக மதிப்பீடு செய்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. இத்தீர்மானத்தை மேற்கொள்கையில், சபையானது மிதமான பணவீக்கத் தோற்றப்பாடொன்றிற்கு மத்தியில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் தொடர்ச்சியினைச் சமிக்ஞை செய்வதுடன் அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் மேலுமொரு குறைப்பினைத் தூண்டுவதற்கான தேவையினைச் சபை கருத்திற்கொண்டது. கிடைப்பனவாகவுள்ள தகவல்களின் அடிப்படையில், பணவீக்கமானது நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்துடன் இசைந்து செல்வதற்கு முன்னர் அடுத்த ஒரு சில மாதங்களுக்கு 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கிற்குக் கீழாக கணிசமானளவிலான இடைவெளியொன்றுடன் தொடர்ந்தும் காணப்படக்கூடுமென்பதனைச் சபை குறித்துக்காட்டியது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, July 24, 2024