45ஆவது சார்க்பினான்ஸ் ஆளுநர்களின் கூட்டம் மற்றும் கருத்தரங்கு

இலங்கை மத்திய வங்கி 2024 யூன் 13-14ஆம் திகதிகளில் 45ஆவது சார்க்பினான்ஸ்; ஆளுநர்களின் கூட்டம் மற்றும் கருத்தரங்கை நடாத்தியிருந்தது. இந் நிகழ்ச்சியில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள், சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சார்க் பிராந்தியத்தில் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்களின் ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முதல் நாளில், “பன்முக - உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கியியல்” என்ற கருப்பொருளில் சார்க்பினான்ஸ்;; ஆளுநர்களின் கருத்தரங்கு கொழும்பில் உள்ள ஹில்டன் கொழும்பு விடுதியில் நடைபெற்றது. இலங்கையின் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சருமான மேன்மைமிகு ரணில் விக்கிரமசிங்கே தொடக்க விழாவில் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சமகால பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார். நாணய மற்றும் இறை உறுதிப்பாட்டின் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன் நாட்டில் நீடித்திருக்கும் உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கு சட்டக்கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்காக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் கோடிட்டுக்காட்டினார். சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், தூதர் முகமது கேலாம் சர்வரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

முழுவடிவம்

Published Date: 

Friday, June 14, 2024