ஆசியாவிற்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை பிராந்திய ஆலோசனைக் குழு 2023.04.29 அன்று கொழும்பில் கூடியது. உன்னிப்பான கண்காணிப்பைத் தேவைப்படுத்திய அண்மைக்கால நிதியியல் அபிவிருத்திகள் மற்றும் பாதிக்கப்படும்தன்மைகளை இக்கலந்துரையாடல்கள் மையப்படுத்தியிருந்தன. அதற்கமைய, பிராந்தியம் முழுவதும் கிறிப்டோ-சொத்துச் செயற்பாடுகளுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் நடைமுறைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அண்மைக்கால முன்னேற்றங்கள், நிதியியல் துறையில் அதன் வளர்ச்சியடைகின்ற உபயோகம் அத்துடன் நிதியியல் உறுதிப்பாட்டிற்கான அதன் உள்ளார்த்தங்கள் என்பவற்றைக் குழு கலந்துரையாடியது. காலநிலை மாற்றத்திலிருந்து தோன்றுகின்ற நிதியியல் இடர்நேர்வுகளை கையாளுவதன் மீது பிராந்தியத்தினுள் இடம்பெற்றுவருகின்ற முன்னேற்றத்தையும் உறுப்பினர்கள் மீளாய்வுசெய்ததுடன், எல்லை கடந்த கொடுப்பனவுகளை மேம்படுத்துதல் மீதான முன்னேற்றம் மற்றும் விரைவானதாகவும் மலிவானதாகவும் மிகவும் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் மற்றும் அனைவரையும் வசதிக்குட்படுத்துவதாகவும் அவற்றை இடம்பெறச்செய்வதிலுள்ள முக்கிய சவால்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க மற்றும் ஹொங் கொங் நாணய அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எட்டி யூ ஆகியோர் கூட்டத்திற்கு இணைத் தலைமைதாங்கினர். புருனை தாருஸ்சலாம், சீனா, ஹொங் கொங் விசேட நிருவாகப் பிராந்தியம், இந்தியா, இந்தோனேசியா, யப்பான், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை நிதியியல் முறைமைகளைப் பாதிக்கின்ற பாதிக்கப்படும்தன்மைகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் நிதியியல் உறுதிப்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் உறுப்பு மற்றும் உறுப்பல்லா நாடுகளின் நிதியியல் அதிகாரசபைகளை ஒன்றாக இணைப்பதற்கு நிதியியல் உறுதிப்பாட்டுச் சபை சாசனத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஆறு பிராந்திய ஆலோசனைச் சபைகளைக் கொண்டுள்ளது. நிதியியல் உறுதிப்பாட்டுச் சபையானது சர்வதேச மட்டத்தில் தேசிய நிதியியல் அதிகாரசபைகளின் பணிகளையும் சர்வதேச தரநியம வகுத்தல் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, நிதியியல் உறுதிப்பாட்டின் நலனுக்காக செயற்திறன் வாய்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல், மேற்பார்வை அத்துடன் வேறு நிதியியல் துறைக் கொள்கைகள் என்பவற்றை அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்துவதை ஊக்குவிக்கின்றது.