இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை வழங்குதல்

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் சார்பில், இலங்கை மத்திய வங்கி புதிய ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட 10 ஆண்டிற்கான பன்னாட்டு முறிகளை (முறிகள்) 2017 மே 04ஆம் நாளன்று வெற்றிகரமாக வழங்கியிருக்கிறது. முறிகளை மூடிஸ் இன்வெஸ்ட்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேடிங் என்பன முறையே ‘B1’, ‘B+’ மற்றும் ‘B+’ இல் தரமிட்டிருக்கின்றன.

இது, இலங்கையின் பதினோராவது ஐ.அ.டொலர் அடிப்படை அளவுக் குறியீட்டினைக் குறிப்பதாகவும் 2007இற்குப் பின்னர் பன்னாட்டு முறிச் சந்தையில் முன்வைக்கப்படுமொன்றாகவும் பல ஆண்டுகளாகப் பன்னாட்டு முதலீட்டாளர் சமூகம் இலங்கைக்குத் தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவிற்கு ஒரு தெளிவான சாசனமாகவும் காணப்படுகின்றது. சிட்டிகுறூப், டியூச் பாங்க், எச்எஸ்பீசி, ஐசிபிசி இன்ரந~னல், ஜே.பி. மோர்கன் மற்றும் ஸ்டான்டட் அன்ட்ட வங்கி என்பன இவ்வெற்றிகரமாக கொடுக்கல்வாங்கலின் கூட்டு முதன்மை முகாமையாளர்களாகவும் பதிவு ஏற்பாட்டாளர்களாகவும் விளங்கினர்.

இக்கொடுக்கல்வாங்கலானது பெடரல் திறந்த சந்தைக் குழுவின் குறிப்புக்கள் வெளிவந்த பின்னரும் பண்ணைத் துறை தவிர்ந்த தொழில் துறையினர் சம்பளப் பிரச்சனைகள் மற்றும் பிரான்சின் தேர்தலுக்கும் முன்னருமான வலுவான சந்தைப் பின்னணியொன்றில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கொடுக்கல்வாங்கலானது ஒரு நாளுக்கு முன்னதாக 2017 மே 3ஆம் நாளன்று விடுக்கப்பட்ட பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் மட்ட உடன்படிக்கையுடன் ஏதேச்சையாக இணைந்ததொன்றாகக் காணப்படுகின்றது.  

கொடுக்கல்வாங்கல் ஆரம்ப விலை வழிகாட்டலான 6.625 சதவீத அளவுடன் 2017 மே 04ஆம் நாள் ஆசியாவின் காலைப்பொழுதில் அறிவிக்கப்பட்டதுடன் இது உயர்தரம் வாய்ந்த முதலீட்டாளர்களின் பரந்தளவினரிடமிருந்தான வலுவான ஈடுபாட்டினைக் காட்டி, ஐ.அ.டொலர் 7.5 பில்லியன் கொண்ட மிகையினை பதிவுசெய்த பின்னணியொன்றில் ஆசிய மாலைப்பொழுதில் இலங்கை இறுதி விலையிடல் வழிகாட்டலை 6.25 சதவீதத்திற்கு (+/-5 அடிப்படைப்புள்ளிகள்) இறுக்கப்படுவத்துவதனை அனுமதித்தது. இறுதியாக முறிகள் நியூயோர்க் மணித்தியாலங்களின் போது 6.20 சதவீதத்தினால் விலையிடப்பட்ட சந்தர்ப்பத்தில் 42.5 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பினைப் பிரதிபலித்து ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட இறுதிக் கொடுக்கல்வாங்கல்களுக்கான ஆரம்ப விலை வழிகாட்டல்களுக்கு மிகக் குறைவானதாகக் காணப்பட்டது. 

இறுதிக் கட்டளைப் பதிவேடுகள் ஐ.அ.டொலர் 11 பில்லியன் மிகையினைக் கொண்டிருந்து 7 மடங்கிற்கும் கூடுதலான மேலதிக உதவுதல்களை அடைந்ததுடன் இது 500 பங்கேற்புக் கணக்குகளிலும் பரந்து காணப்பட்டது. இது இலங்கையின் மீதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் நேர்க்கணிய தோற்றப்பாட்டின் மீதும் அவர்கள் கொண்டிருந்த தொடர்ச்சியான நம்பிக்கையினைத் தெளிவாகப் பிரதிபலிப்பதாக இருந்தது. 2016ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்கத் திறைசேரியின் 10 ஆண்டுகால விளைவிற்கும் இலங்கை முறியின் 10 ஆண்டு கால விளைவிற்குமிடையிலான வீச்சினை 2017இன் வீச்சுடன் ஒப்பிடுகையில் இது கணிசமாக வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களினால் கோரப்பட்ட இடர்நேர்வுக் கட்டணம் கணிசமாக வீழ்ச்சியடைந்தமையினை எடுத்துக்காட்டியது. 

புவியியல்சார் ரீதியில் பகிர்ந்தளிப்பு நன்கு பன்முகப்படுத்தப்பட்டிருக்கிறது. இறுதி ஒதுக்கில் 58 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் 22 சதவீதம் ஐரோப்பாவிற்கும் எஞ்சிய 20 சதவீதம் ஆசியாவிற்கும் கிடைத்திருக்கிறது. முதலீட்டாளரின் வகைப்படி இவ்வொதுக்கில் 88 சதவீதம் நிதிய முகாமையாளர்களும் 9 சதவீதம் வங்கிகளும் 5 சதவீதம் காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியங்களும் எஞ்சிய 3 சதவீதத்தினை மற்றைய முதலீட்டாளர்களும் பெற்றிருந்தனர். 

குறிப்பு:

இப்பத்திரிகை வெளியீடு ஐக்கிய அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான பிணையங்கள் தொடர்பிலான முன்வைப்பல்ல. இங்கே குறிப்பிடப்பட்ட பிணைகள் திருத்தப்பட்டவாறான, 1933ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்கப் பிணையங்கள் சட்டம் “(பிணையங்கள் சட்டம்)” அல்லது ஐக்கிய அமெரிக்காவின் ஏதேனும் மாநில அரசின் பிணையங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுடன் பதிவு செய்யப்படவும் மாட்டாதென்பதுடன் பதிவின்றி அல்லது ஏற்புடைத்தான விதிவிலக்கல்களின்றி அல்லது கொடுக்கல்வாங்கலொன்றிற்குட்படாது பிணையங்கள் சட்டம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஏற்புடைத்தான மாநில பிணையங்கள் சட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவில் முன்வைக்கப்படவோ அல்லது விற்கப்படவோ முடியாது. ஐக்கிய அமெரிக்காவில் பிணையங்கள் தொடர்பில் ஏதேனும் பகிரங்க வழங்கல்களை மேற்கொள்ள வேண்டுமாயின் வழங்குநரிடமிருந்து பெறப்பட வேண்டிய முன்விபரணங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் அது வழங்குநர் பற்றிய விபரமான  தகவல்களையும் கொண்டிருத்தல் வேண்டும். இப்பத்திரிகை வெளியீடு, சட்ட ரீதியற்றதாக இருக்கும் எந்தவொரு நியாயாதிக்கப் பகுதியிலும் அவற்றை வழங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ உரிய விதத்தில் விற்பதற்கான முன்வைப்பொன்றினையோ அல்லது பிணையங்களை வாங்குவதற்கானதொரு முன்வைப்பினையோ கொண்டிருக்கவில்லை. தரமிடலானது பிணையங்களை விற்பதற்கு, வாங்குவதற்கு அல்லது உடமையில் வைத்திருப்பதற்கானதொரு விதந்துரைப்பல்ல என்பதுடன் அது எந்தவொரு நேரத்திலும் தரமிடல் முகவரினால் இடைநிறுத்தப்படுவதற்கும் அல்லது குறைக்கப்படுவதற்கும் அல்லது புறக்கீடு செய்யப்படுவதற்கும் உட்பட்டதாகும். 

Published Date: 

Friday, May 5, 2017