கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 மாச்சில் தயாாிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாாிப்பு), 2024 மாச்சில் 62.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துஇ தயாரித்தல் நடவடிக்கைகளில் விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. மூன்று ஆண்டுகளில் பதிவாகியிருந்த அதிகூடிய தயாரித்தல் கொ.மு.சுட்டெண்ணை இது குறிக்கின்றது. கேள்வியினால் பிரதானமாகத் தூண்டப்பட்டுஇ அனைத்து துணைச் சுட்டெண்களும் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் விரிவடைந்தமை இவ்வதிகரிப்பிற்கு பருவகால பங்களித்தன.
புதிய கட்டளைகளிலும் உற்பத்தியிலும் அதிகரிப்பிற்கு உணவு மற்றும் குடிபானங்கள் அத்துடன் புடவைகள் மற்றும் அணியும் ஆடை துறையின் தயாரித்தல் பிரதான காரணமாக அமைந்திருந்தது. வரவிருக்கும் பண்டிகைப் பருவகாலம் பற்றி அநேகமான தயாரிப்பாளர்கள்இ விசேடமாக உணவு மற்றும் குடிபானத் துறையைச் சார்ந்தவர்கள் சாதகமான எண்ணப்பாங்கினைக் கொண்டிருந்தனர். மேலும்இ புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி என்பவற்றிற்கிசைவாக தொழில்நிலையும் கொள்வனவுகளின் இருப்பும் மாதகாலப்பகுதியில் அதிகரித்தன. மேலும்இ விலை மட்டங்களில் வீழ்ச்சியும் அவதானிக்கப்பட்டது. அதேவேளைஇ நிரம்பலர்களின் விநியோக நேரம் மாச்சில் மெதுவான வீதத்திலாயினும் நீட்சியடைந்து காணப்பட்டது.