கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம்; 2024 மாச்சில் சடுதியாக வீழ்ச்சியடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 பெப்புருவரியின் 5.9 சதவீதத்திலிருந்து 2024 மாச்சில் 0.9   சதவீதத்திற்கு சடுதியாக சரிவடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இச்சரிவானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின்  எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது.

உணவல்லா வகையானது 2024 பெப்புருவரியில் அவதானிக்கப்பட்ட 7.0 சதவீதம் கொண்ட பணவீக்கத்தடன் ஒப்பிடுகையில் 2024 மாச்சில் 0.5 சதவீதம் கொண்ட பணச்சுருக்கமொன்றை (ஆண்டிற்கு ஆண்டு) பதிவுசெய்தது. எவ்வாறெனினும், உணவுப் பணவீக்கம், 2024 பெப்புருவரியின் 3.5 சதவீதத்திலிருந்து 2024 மாச்சில் 3.8 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. உணவு வகையிலுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட 0.66 சதவீதம் கொண்ட விலை வீழ்ச்சிகளினதும் உணவல்லா வகையின் பொருட்களில் அவதானிக்கப்பட்ட 1.28 சதவீதம் கொண்ட வீழ்ச்சிகளினதும் காரணமாக  கொ.நு.வி.சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2024  மாச்சில் -1.94 சதவீதமாகப் பதிவாகியது. அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் (ஆண்டிற்காண்டு), 2024 பெப்புருவரியின் 2.8 சதவீதத்திலிருந்து 2024 மாச்சில் 3.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.

அவ்வவ்போது மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், பணவீக்கமானது பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மூலம் துணையளிக்கப்பட்டு, எதிர்வரும் காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட மட்டத்தை அடைந்து, நடுத்தர காலத்தில் இலக்கிற்கு மேல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, March 28, 2024