கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 பெப்புருவரியில் தயாாிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் மேம்பாடுகளை எடுத்துக்காட்டின

தயாரித்தலுக்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாாிப்பு), 2024 பெப்புருவரியில் 56.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரித்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவடைதலினை எடுத்துக்காட்டியது. இம்மேம்படுதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

தொழில் நடவடிக்கைகளின் தொடர்ச்சியான விரிவடைதலானது ஏனைய பல துணைத் துறைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகளினால்  தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, நிலவுகின்ற குறைவான சந்தை வட்டி வீதங்களுக்கிசைவாக நிதியியல் பணிகளின் தொழில் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்தன. மேலும், மாதகாலப்பகுதியில், போக்குவரத்து மற்றும் கல்வி துணைத் துறைகளில் சாதகமான அபிவிருத்திகளும் பதிவுசெய்யப்பட்டன. அதேவேளை, சுற்றுலாப்பயணி வருகைகள் 2020 சனவரியிலிருந்து அதிகூடிய மட்டத்தைப் பதிவுசெய்தமைக்கு மத்தியில்; தங்குமிடம், உணவு மற்றும் குடிபானங்கள் துணைத் துறை தொடர்ந்தும் வளர்ச்சியடைந்தது.

முழுவடிவம்

Published Date: 

Friday, March 15, 2024