கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2023இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் மெதுவடைவொன்றை எடுத்துக்காட்டி, 7.1 சதவீதம் கொண்ட வளர்ச்சி வீதமொன்றைப் பதிவுசெய்தது. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளிலும் அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டிகளிலும் இத்தகைய மெதுவடைவை அவதானிக்கலாம். இவை, முறையே 8.8 சதவீதம், 6.7 சதவீதம் மற்றும் 5.9 சதவீதம் கொண்ட ஆண்டு அதிகரிப்புகளைப் பதிவுசெய்தன. காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது அரையாண்டு அடிப்படையில் வீழ்ச்சியொன்றை எடுத்துக்காட்டியதுடன் 2023இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 2023இன் இரண்டாம் அரையாண்டுக் காலப்பகுதியில் 2.1 சதவீதம் கொண்ட மிதமடைந்த வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. இவ்வீழ்ச்சிக்கு 2023இன் முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் வதிவிடக் காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியிலும் அதனைத் தொடர்ந்து வர்த்தக மற்றும் கைத்தொழில் காணி விலைக் குறிகாட்டிகளிலும் ஏற்பட்ட மெதுவான அதிகரிப்பு பெருமளவில் காரணமாக அமைந்தது.
Thursday, February 22, 2024