வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2023 திசெம்பர்

ஏற்றுமதி வருவாய்களுடன் ஒப்பிடுகையில் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட ஒப்பீட்டளவிலான பாரிய சுருக்கத்தினால் ஆதரவளிக்கப்பட்டு 2023இற்கான வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2010இலிருந்தான மிகவும் தாழ்ந்தளவிலான மட்டத்தினைப் பதிவுசெய்தது.

வர்த்தகப் பற்றாக்குறையானது 2022 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 2023 திசெம்பரில் விரிவடைந்தது. இருப்பினும், இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் அண்மைக்காலத் தளர்த்தல்களுக்கு மத்தியில் இறக்குமதிகள் தொடர்ந்தும் மிதமடைந்துக் காணப்பட்டன. 

தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023இல் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 6 பில்லியன் தொகை ஆரோக்கியமான மட்டமொன்றைப் பதிவுசெய்ததுடன் 2021 ஏப்பிறலிலிருந்தான உயர்ந்தளவிலான மாதாந்தப் பெறுமதியை 2023 திசெம்பரில் பதிவுசெய்தது. 

2023ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்கவொரு மீட்சியின் விளைவாக ஐ.அ.டொலர் 2 பில்லியன் தொகையினை விஞ்சிக் காணப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளன.

அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2023இல் தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன.

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2023 திசெம்பர் இறுதியளவில் ஐ.அ.டொலர் 4.4 பில்லியனிற்கு குறிப்பிடத்தக்களவிற்கு மேம்பட்டதுடன் இலங்கை ரூபாவானது 2023 ஆண்டு காலப்பகுதியில் 12.1 சதவீத உயர்வொன்றினைப் பதிவுசெய்தது.

முழுவடிவம்

 

Published Date: 

Wednesday, January 31, 2024