2023 திசெம்பரில் 48.6 கொண்ட மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு கட்டடவாக்க கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் மெதுவான சுருக்கமொன்றை எடுத்துக்காட்டியது. கருத்திட்டப் பணிகள் கிடைக்கப்பெறுகின்றமை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை நடவடிக்கை அளவுகளை தொடர்ந்தும் தடைப்படுத்தியது என பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் புதிய கட்டளைகள் பரந்தளவில் ஒரே மாதிரியான வேகத்தில் வீழ்ச்சியடைந்தன. தற்போது வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்கள் மீதே தாம் மிதமிஞ்சியளவில் தங்கியிருப்பதாக பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர். அதேவேளை, கருத்திட்ட நிறைவடைதலுக்கிசைவாக பணியாளர்களின் ஓய்வின் பிரதான காரணமாக தொழில்நிலை சுருக்கமடைந்தது. மேலும், முன்னெடுக்கப்படும் பணியும் வரவிருக்கும் கருத்திட்டங்களும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தமையினால் கொள்வனவுகளின் அளவு மாத காலப்பகுதியில் சுருக்கமடைந்தது. அதேவேளை, நிரம்பலர்களின் விநியோக நேரம் திசெம்பரில் நீட்சியடைந்து காணப்பட்டது.
எதிர்வருகின்ற கருத்திட்டங்களில் குறைவு மற்றும் விலை மட்டங்கள் மீதான வரித்திருத்தங்களின் தாக்கம் என்பவற்றுடன் அடுத்த மூன்று மாதங்களுக்கான தொழிற்துறை பற்றிய எதிர்பார்க்கை எதிர்மறையான நோக்கில் காணப்படுகின்றது.