உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல்

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தலின் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கத்திற்கு எதிராக இன்று, அதாவது 2023 ஓகத்து 28 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களின் பிரதிநிதிகள் என தாங்களாக கோருகின்ற ஆட்கள் குழுவொன்றினால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது,  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்புபட்ட விடயங்கள் பற்றிக்  கலந்துரையாடுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களுடனான சந்திப்பொன்றுக்காக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக கோரிக்கைவிடுத்தனர். சொல்லப்பட்ட கோரிக்கையினை பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சொல்லப்பட்ட எதிர்ப்பில் ஈடுபட்டவர்களைப் பிரநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து பேருடன் இலங்கை மத்திய வங்கியின் வளாகத்தில் பி.ப. 2.30 மணிக்கு இன்றே கூட்டமொன்று கூட்டப்படவுள்ளதென கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு அறிவித்திருந்தார். எனினும், கூட்டம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அக்கூட்டத்தில் பங்குபற்றுவதற்கான அவர்களது இயலாமை பற்றி எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினூடாக இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளனர். ஆகையினால், உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை, உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகையை நடைமுறைப்படுத்துவதனூடாக உறுப்பினர் பங்களிப்புகளுக்கு உத்தரவாதமளிக்கப்படவுள்ள முறை மற்றும் உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகையை நடைமுறைப்படுத்தினாலும் கூட,  அடுத்துவருகின்ற சில ஆண்டுகாலப்பகுதியில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டதைப் போன்று குறைந்தபட்ச முதலீட்டு ஆதாயம் அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என்பது பற்றிய அவர்களது கரிசனைகளைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்கு சொல்லப்பட்ட எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.

Published Date: 

Monday, August 28, 2023