‘இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2023’ என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களமானது இக்கையேட்டை வெளியிடுகின்றது. எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்நிலை’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை இது உள்ளடக்குகின்றது. இவ்வெளியீடு சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களில் ஆர்வமுள்ளோருக்கு பயனுள்ள தகவல் சேகரிப்பாகக் காணப்படும்.
இவ்வெளியீட்டின் தமிழ் வடிவம் இலத்திரனியல் பதிப்பில் கிடைக்கத்தக்கதாகவுள்ளது என்பதுடன் மத்திய வங்கியின் வெப்தளத்தின்(http://www.cbsl.gov.lk) ஊடாக தரவிறக்கம் செய்யமுடியும்.