இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 10(இ) பிரிவின் நியதிகளின் பிரகாரம் 2023ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை வழங்கி, அதனை 2023.08.09 அன்று 2344/17ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற அனைத்து நிதியியல் பணி வழங்குநர்களுக்கும் இவ்வொழுங்குவிதிகள் ஒரேசீர்மையான அடிப்படையில் ஏற்புடையதாவிருக்கும் என்பதுடன் இலங்கை மத்திய வங்கியின் குறிப்பாக, வங்கித்தொழில் சட்டம், நிதித்தொழில் சட்டம் மற்றும் நிதிக்குத்தகைக்குவிடுதல் சட்டம் என்பவற்றின் கீழ் வழங்கப்பட்ட நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு பணிப்புரைகளின் தற்போதைய நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இவ்வொழுங்குவிதிகள் சர்வதேச தரநியமங்களுக்கிசைவாக வகுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மத்திய வங்கி மூலமான சந்தை நடத்தை மேற்பார்வைக்கு அடித்தளத்தினை உருவாக்கி இலங்கையில் நம்பிக்கையான மற்றும் உறுதியான நிதியியல் முறைமையொன்றை உருவாக்குவதை வசதிப்படுத்தும்.
ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிதியியல் நிறுவனங்களின் நிதியியல் உற்பத்திகளை அத்துடன் பணிகளைக் கையாளுகின்ற தனிப்பட்டவர்களும் வியாபாரங்களும் மேம்படுத்தப்பட்ட சேவை மட்டங்களுடன் நியாயமான மற்றும் வெளிப்படையான விதத்தில் நடாத்தப்பட்டு, அவர்களது நிதிச் செயற்பாடுகள் பற்றி அதிக நம்பிக்கையுடன் நன்கு அறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவர்களை இயலச்செயவதனை உறுதிசெய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட பல வகையான தேவைப்பாடுகள் மற்றும் சிறந்த நடத்தைகள் என்பவற்றை இவ்வொழுங்குவிதிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. டிஜிட்டல் நிதிப் பணிகள் அத்துடன் வாடிக்கையாளர் தரவுப் பாதுகாப்பு அதேபோன்று விசேட தேவையுடைய நிதியியல் வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகள் பற்றிய துறைகளில் பிந்திய அபிவிருத்திகளும் இவ்வொழுங்குவிதிகளுக்குள் கூட்டிணைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வொழுங்குவிதிகள் மத்திய வங்கியினால் வழங்கப்படும் பிணக்குத் தீர்த்தல் பொறிமுறைக்கு மாற்றுவழியாக குறைநிரப்புச்செய்யப்பட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட உள்ளக முறைப்பாடு கையாளுகின்ற பொறிமுறையினை வழங்குகின்றன. இலங்கையில் முதற்தடவையாக, இவ்வொழுங்குவிதிகள் ஊடாக இலங்கை மத்திய வங்கி தனியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வாடிக்கையாளர் பாதுகாப்பு மேற்பார்வையினை அதாவது இலங்கை மத்திய வங்கிக்கும் இவ்வொழுங்குவிதிகளின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்குமான முழுமையான ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அமுல்படுத்தல் அதிகாரங்களைக் கொண்டு சந்தை நடத்தை மேற்பார்வையினை கொண்டு நடாத்துவதை வசதிப்படுதுகின்றது.
சவால்மிக்க சூழலில் இவ்வொழுங்குவிதிகளுடன் முழுமையான இணங்குவித்தலினை உறுதிசெய்வதற்கு தேவைப்படும் காலத்தினைப் பரிசீலனையில் கொண்டு, 2023.08.09 அன்றைய வெளியீட்டுத் திகதியிலிருந்து 12 மாதங்களுக்குள் அதிகரிக்கின்ற அடிப்படையில் இவ்வொழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வொழுங்குவிதிகள் பொதுமக்களின் பார்வைக்காக https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/cdg/f... இல் கிடைக்கப்பெறுகின்றது.