இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 மாச்சு

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மாச்சு மாதத்தில் 66.5 கொண்ட சுட்டெண்ணினை பதிவு செய்ததுடன் இது பெப்புருவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.4 சுட்டெண்  புள்ளிகளை கொண்ட ஒரு அதிகரிப்பாகும். இது, புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களின் அதிகரிப்பில் பிரதிபலிக்கப்பட்டவாறு புதுவருட பருவகால கேள்விகளினுடான அதிகரிக்கும் கேள்விகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைந்து உற்பத்தி நடவடிக்கைகள் 2017 மாச்சில் தொடர்ச்சியான அதிகரிப்பை குறித்துக்காட்டியது. கொள்வனவுகளின் இருப்பானது, ஒன்றுசேர்ந்த இருப்புகளின் அதிகரிப்பு மற்றும் கடந்த மாதத்தில் காணப்பட்ட வழங்குதல் தாமதங்கள் சீர்செய்யப்பட்டமை போன்றவற்றின் காரணமாக அதிகரித்திருந்தது. எவ்வாறாயினும், நிரம்பலர் வழங்கல் நேரம் குறிப்பாக சீனாவின் அவர்களுடைய புதுவருட காலத்திற்கு பிறகு வழங்குதல் ஏற்பாடுகள் சாதாரண நிலையாக்கப்பட்டதுடன் ஒரு குறைவினை பதிவு செய்தது. தொழில்நிலை துணைச் சுட்டெண்ணும் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது சிறிதளவில் சரிவடைந்து காணப்பட்டது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 அடிமட்டத்திற்கு மேலேயே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்காக மிதவேகமொன்றினை சுட்டிக்காட்டியது. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 பெப்புருவரியின் 57.3 சுட்டெண் புள்ளியிலிருந்து  மாச்சு மாதத்தில் 60.8 சுட்டெண் புள்ளிகளைப் பதிவுசெய்தது. கடந்தமாதத்தின் பெறுமதியிலும் பார்க்க கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பானது, பணிகள் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 மாச்சில் உயர்  வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டியது. பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட அதிகரிப்பானது புதிய வியாபாரங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் ஆதரவளிக்கப்பட்டன. தொழில்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் 2017 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் 2017 மாச்சில் குறைவடைந்த வேளையில் நிலுவையிலுள்ள பணிகள் குறைவான வீதத்தில் குறைவடைந்திருந்தது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் தொகுப்பு செயன்முறையில் பரிசீலனைக்கெடுக்கப்படாத விதிக்கப்பட்ட விலைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 மாச்சில் மெதுவான வீதத்தில் அதிகரித்திருந்தது. தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புக்கள் சுட்டெண் மூலம் அளவிடப்படும் எதிர்கால தொழிலாளர் செலவு 2017 மாச்சில் அதிகரித்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, April 12, 2017