2016 திசெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் கலப்பானதாக காணப்பட்டது. இறக்குமதி செலவினத்தில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்து 2016 திசெம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருவாய்களில் காணப்பட்ட வளர்ச்சியை மிகக்கூடுதலாக எதிரீடு செய்தது. சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவலுப்பல்களிலிருந்தான வருவாய்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், இம்மாத காலப்பகுதியில் ஆரோக்கியமான வீதமொன்றில் சாதகமான விதத்தில் வளர்ச்சியடைந்தன. அரச பிணையங்கள் சந்தை திசெம்பரில் தேறிய வெளிப்பாய்ச்சல் ஒன்றை காட்டிய வேளையில் கொழும்பு பங்கு பரிவர்த்தனைக்கு சில உட்பாய்ச்சல்கள் ஏற்பட்டமையையும் அவதானிக்க முடிந்தது.
Published Date:
Monday, March 27, 2017