“இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம்” பற்றி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க வழங்கும் பகிரங்க விரிவுரை (சிங்கள மொழிமூலம்)

சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை மத்திய வங்கியினை ஆளுகின்ற சட்டவாக்கமாக வரவுள்ள இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,  இது பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நோக்கில், முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க, பகிரங்க விரிவுரையொன்றினை சிங்கள மொழிமூலம் வழங்கவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து வளவாளர்களைக்கொண்ட குழாமொன்றுடனான கலந்தாராய்வொன்றும் இடம்பெறும். இதில் எவையேனும் கரிசனைகள் ஏதுமிருப்பின் தெரிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் அவையோருக்கு வழங்கப்படும்.

மத்திய வங்கியின் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு 2023 மாச்சு 16 அன்று ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, இல.58 இல் அமைந்துள்ள வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் கேட்போர் கூடத்தில் பி.ப.2.30 தொடக்கம் பி.ப.4.30 வரை இடம்பெறும்.

இந்நிகழ்வில் சமூகமளிப்பதற்கு ஆர்வமிக்க அனைவரும் வரவேற்கப்படுகின்றனர். இவ்விரிவுரை இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ யூரியுப் (YouTube) அலைவரிசை வாயிலாகவும் முகநூல் (Facebook) பக்கத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

Published Date: 

Tuesday, March 14, 2023