தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013 = 100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 சனவரியின் 6.5 சதவீதத்திலிருந்து 2017 பெப்புருவரியில் 8.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டும் 2017 பெப்புருவரியின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கத்திற்கு பங்களித்தன. அவதானிக்கப்பட்ட மாதாந்த விலை அதிகரிப்பிற்குப் புறம்பாக, 2016 பெப்புருவரியில் காணப்பட்ட தாழ்ந்த தளமும் 2017 பெப்புருவரியில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் கூடியளவிற்கு அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்களவிற்கு பங்களித்தது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2017 சனவரியில் 4.6 சதவீதத்திலிருந்து 2017 பெப்புருவரியில் 5.1 சதவீதத்திறகு; அதிகரித்தது.
மாதாந்த மாற்றத்தினைப் பரிசீலனையில் கொள்ளும் பொழுது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2017 சனவரியில் 119.3 சுட்டெண் புள்ளியிலிருந்து 2017 பெப்புருவரியில் 119.9 சுட்டெண் புள்ளிக்கு அதிகரித்தது. இம்மாதாந்த அதிகரிப்புக்கு உணவு விடயங்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்தது. உணவு வகையில்; தேங்காய், காய்கறிகள், தேங்காய் எண்ணெய், பச்சை மிளகாய் மற்றும் உடன் மீன் என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் அதிகரித்தன. உணவல்லா வகையில் போக்குவரத்து, கல்வி, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; தளபாடம், வீட்டு அலகுப் பொருட்கள் மற்றும் வழமையான வீட்டு; உபயோகப் பொருட்களின் பேணல்; பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகிய துணைப் பணிகளிலுள்ள விடயங்களின் விலைகள் அதிகரித்தன. உணவு வகைகள் மற்றும் சுற்றுலா விடுதிகளின் துணைத் துறையின் விலைகள் சிறிதளவில் அதிகரித்தன. 2017 பெப்புருவரியில் வெறியக் குடிவகைகள், புகையிலை மற்றும் பொழுதுபோக்கு மற்றும் காலாச்சாரத்தின் விலைகள் வீழ்ச்சியடைந்த வேளையில் நலத் துணைத்துறை வகை சிறிதளவு வீழ்ச்சியைப் பதிவு செயத்து. அதேவேளை, தொடர்பூட்டல் துணைத் துறையின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டன.
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 பெப்புருவரியில் 7.1 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2017 சனவரியின் 6.2 சதவீதத்திலிருந்து 2017 பெப்புருவரியில் 6.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.