தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் பெப்புருவரியில் 57.1 கொண்ட சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 சனவரியுடன் ஒப்பிடும் போது 0.9 சுட்டெண் புள்ளிகள் அதிகரிப்பை காட்டியது. இது, புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்ணில் பிரதிபலிக்கப்பட்டவாறு வருகின்ற புத்தாண்டுகால பருவத்திற்கான அதிகரிக்கும் கட்டளைகள் பெரிதும் காரணாமாக இருந்ததோடு பெப்புருவரி 2017ல் தயாரிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக விரிவாக்கத்தினை குறித்துக்காட்டியது. நீடிக்கும் நிரம்பலர் வழங்கல் நேரத்தில் பிரதிபலிக்கப்பட்டவாறு சனவரி மாதத்தில் சேர்த்துக்கொள்ளப்படட இருப்புகளின் பாவனை மற்றும் மூலப்பொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்கள் கொள்வனவுகள் இருப்பு துணைச் சுட்டெண் பெப்புருவரியில் குறைவடைந்தமைக்கு காரணமாக அமைந்தது. தொழில்நிலைச் துணைச்சுட்டெண் அதிகரித்திருந்த வேளையில் உற்பத்தி துணைச்சுட்டெண் மாற்றமடையாமல் காணப்பட்டது. பெப்புருவரி மாதத்தில் காணப்பட்ட குறைந்த வேலைநாட்கள் அதிகரிக்கும் கேள்விகளுக்கு ஏற்ற வகையில் உற்பத்தியினை அதிகரிப்பதற்கு ஒரு தடையாக காணப்பட்டது. ஒட்டுமொத்த தரவுப்புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைதது; துணைச் சுட்டெண்களும் 50.0 அடிமட்டத்திற்கு மேலேயே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்காக மேம்பாடுடொன்றினைக் காட்டின.
பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 சனவரியின் 57.5 சுட்டெண் புள்ளியிலிருந்து பெப்புருவரியில் 57.3 சுட்டெண் புள்ளிகளைப் பதிவுசெய்தது. கடந்த மாதத்தின் பெறுமதியிலும் பார்க்க கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பணிகள் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 பெப்புருவரியில; மெதுவான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டியது. பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு வியாபார நடவடிக்கை துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியும் நிலுவையிலுள்ள பணிகள் துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியும் காரணங்களாகின. புதிய வியாபாரங்கள், தொழில்நிலைச் சுட்டெண் மற்றும் நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் துணைச் சுட்டெண் 2017 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2017 பெப்புருவரியில் அதிகரித்தது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் தொகுப்பு செயன்முறையில் பரிசீலனைக்கெடுக்கப்படாத விதிக்கப்பட்ட விலைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2017 பெப்புருவரியில் குறைவடைந்தது. தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புக்கள் சுட்டெண் மூலம் அளவிடப்படும; எதிர்கால தொழிலாளர் செலவு 2017 பெப்புருவரியில் அதிகரித்தது.