தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 நவெம்பரில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதத்திற்கும் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஒத்தோபரின் 70.6 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 65.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதேபோன்று, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஒத்தோபரின் 80.9 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 69.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஒத்தோபரின் 61.3 சதவீதத்திலிருந்து 2022 நவெம்பரில் 60.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2022 ஒத்தோபரில் அவதானிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றத்தின் வீழ்ச்சி 2022 நவெம்பரில் தொடர்ந்தும் இடம்பெற்று 0.27 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. 0.49 சதவீதமாகவிருந்த உணவு வகையிலுள்ள பொருட்களின் மாதாந்த விலைகளின் வீழ்ச்சி, இதற்கு பிரதானமாகப் பங்களித்தது. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், சீனி, அரிசி, கருவாடு மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும், மாத காலப்பகுதியில் ஆடை மற்றும் காலணி, நலம் (தனியார் வைத்தியசாலைகளுக்கானஃ சிகிச்சை நிலையங்களுக்கான கொடுப்பனவுகள்), தளபாடம், வீட்டுச் சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் துணை வகைளில் மாதகாலப்பகுதியில்  அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களால் தூண்டப்பட்டு 2022 நவெம்பரில் உணவல்லா வகையிலிருந்தான பங்களிப்பு 0.23 சதவீதமாகவிருந்தது.  எனினும், போக்குவரத்து (பெற்றோல்), வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (பராமரித்தலுக்கான பொருட்கள்) துணை வகைகள் 2022 நவெம்பரில் வீழ்ச்சியடைந்தன. 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, December 21, 2022