தூதுக்குழுவினது விஜயத்தின் இறுதியில் விடுக்கப்பட்ட பத்திரிகை வெளியீடு, ப.நா. நிதிய அலுவலர் குழு நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் அது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களைக் கொண்ட ப.நா.நிதியத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியுள்ளது. இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ப.நா.நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது ப.நா.நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இத்தூதுக் குழு ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில், அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பர். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக ப.நா.நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
ஜாவூ லீ அவர்களினால் தலைமை தாங்கப்பட்ட ப.நா.நிதியத்திலிருந்தான அலுவலர் குழுவொன்று, மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளினால் உதவியளிக்கப்பட்டுவரும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இலங்கை அதிகாரிகளின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக 2017 பெப்புருவரி 21 - மாச்சு 07ஆம் நாட்கள் வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்தது. இந்நிகழ்ச்சித்திட்டமானது அரச நிதிகளை, வலுவானதும் உறுதியானதுதொரு நிலையொனெ;றினை இடுவதற்கும் அதன் சமூக மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கான வசதிகளை உருவாக்குவதற்குமான நோக்கத்தினைக் கொண்டதாகும். விஜயத்தின் முடிவில் திரு. லீ பின்வரும் அறிக்கையினை வெளியிட்டிருக்கின்றார்:
'இரண்டாவது மீளாய்வினை நிறைவு செய்வது தொடர்பில் குழுவானது அரசாங்கத்துடனான அலுவலர்மட்ட இணக்கப்பாடொன்றினை எய்வது தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. ஏப்பிறலில் வாஷிங்டன் டி.சியில் இடம்பெறும் ப.நா.நிதியத்தினதும் உலக வங்கியினதும் வசந்தகால கூட்டங்களின் போது இக்கலந்துரையாடல்கள் தொடரும்.
'ஒட்டுமொத்தமாக, 2016இன் பின்னரைப் பகுதியில் பேரண்டப் பொருளாதார செயலாற்றம், வளர்ச்சியில் காணப்பட்ட படிப்படியான மீட்சி, வரட்சி மற்றும் பெறுமதிசேர் வரியில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் தாக்கம் காரணமாக பணவீக்கம் உயர்வடைந்தமை என்பனவற்றின் விளைவாக கலப்பான செயலாற்றத்துடன் காணப்பட்டது. நடைமுறைக் கணக்கு உறுதியானதாகக் காணப்பட்டதெனினும், மீண்டும் ஆரம்பமான மூலதன வெளிப்பாய்ச்சல் காரணமாக பலயீனமடைந்தது. மிகநீண்ட வரட்சிக் காலம், உணவு மற்றும் எண்ணெய் இறக்குமதிகளை அதிகரித்து, வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் சென்மதி நிலுவையில் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியது.
'தூதுக்குழுவானது, அதிகாரிகள் ப.நா.நிதியத்தின் ஆதரவுடனான பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டங்களை திசெம்பர் இறுதியளவில் அனைத்து இறைக்கணியம்சார் இலக்குகளுடன் நடைமுறைப்படுத்துவதற்கு வலுவான முயற்சிகளை மேற்கொணட்மைக்காக அவர்களைப் பாராட்டியது. அரசிறை சேகரிப்புக்கள் அதிகரித்தமை மற்றும் அரசிறை நிருவாகத்தினை தன்னியக்கப்படுத்தியமை என்பன தொடர்பில் கணிசமமான முன்னேற்றங்கள் அடையப்பட்டிருக்கின்றன. எனினும் தேறிய பன்னாட்டு ஒதுக்குகள் இலக்கிலும் பார்க்க சிறிதளவு குறைவாகக் காணப்பட்டதுடன் சில சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட காலதாமதம் காரணமாக அமைப்பியல் அடித்தள அளவுக் குறியீடுகளை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்ட முன்னேற்றம் ஓரளவிற்கு சமச்சீரற்றதாக காணப்பட்டது. இதற்கமைய, தூதுக்குழுவினரும் அதிகாரிகளும் நிச்சயமற்ற வெளிநாட்டு சூழலின் பின்னணியில் சீர்திருத்தத்தில் உத்வேகத்தினைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடினர்.
'இதனை அடைவதற்கு, அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்;திரட்சியை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொள்வதும் இதன் சமூக மற்றும் அபிவிருத்திக் குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பதற்கு போதுமான மூலவளங்களை உருவாக்குகின்ற அதேவேளையில் படுகடன் உறுதிப்பாட்டினை பேணுவதும் அரசாங்கத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக, புதிய உள்நாட்டரசிறை சட்டத்திற்கான சட்டவாக்க செயன்முறைகளை பொதுமக்களின் பயன்மிக்க ஆலோசனைகளுடன் முன்கூட்டியே மேற்கொள்வது கூடியளவிற்கு ஊகிக்கத்தக்க விதத்திலும், வினைத்திறனும், சமச்சீரான அமைப்பிலும் வரிமுறைகளை மீள் சமநிலைப்படுத்தும் விதத்திலும் மேற்கொள்வது மிக இன்றியமையாததொரு நடவடிக்கையாக இருக்கிறது.
'தூதுக்குழுவானது, பணவீக்க அழுத்தங்களை கண்காணிப்பதில் தொடர்ந்தும் விழிப்புடன் இருப்பதற்கு இலங்கை மத்திய வங்கியை ஊக்குவித்ததுடன், பணவீக்கம் அல்லது கொடுகடன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாவிடின் நாணயக் கொள்கையினை இறுக்கமாக்குவதற்கு ஆயத்தநிலையில் இருக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. அதிகரித்துவரும் வெளிநாடடு; அழுத்தங்களை கவனத்தில் கொண்டு பன்னாட்டு ஒதுக்குகளை மீளக்கட்டியெழுப்புவதற்கும் செலாவணிவீத நெகிழ்ச்சித் தன்மையினை பேணுவதற்கும் இலங்கை மத்திய வங்கி வலுவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தூதுக்குழு ஊக்குவிப்புக்களை வழங்கும். இது தொடர்பில், நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடல் கடட் மைப்பொன்றிறகு; மாறிச் செல்வதற்கு வசதியளிப்பதற்காக ப.நா.நிதிய தொழில்நுட்ப உதவிகள் பற்றி தூதுக்குழுவும் அதிகாரிகளும் கலந்துரையாடின.
'அரச நிதியியல் முகாமைத்துவத்துவத்தையும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் அமைப்பியல் சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தலையும் விரைவுபடுத்தவதற்கும் இதுவரை பெறப்பட்ட கணிசமான தொழில்நுட்ப உதவிகளைக் கட்டியெழுப்புவதற்கும் தூதுக்குழு அரசாங்கத்தினை ஊக்குவிக்கின்றது. இது தொடர்பில் அரசிற்குச் சொந்தமான பாரிய தொழில்முயற்சிகளுக்கான கம்பனி கருத்துக்களுடன் தொடர்பான அறிக்கைகளை இறுதிப்படுத்தி வெளியிடுவது சீர்திருத்த செயன்முறையில் ஒழிவுமறைவற்ற தன்மையினையும் பொறுப்புக்கூறும் தன்மையினையும் அதிகரிப்பதற்கு அவசியமான முதற்கட்ட நடவடிக்கையாக காணப்படுகிறது. தூதுக்குழுவும் கூட வியாபாரச் சூழல் மற்றும் பல்வேறு அபிவிருத்திப் பங்காளர்களினால் ஆதரவளிக்கப்பட்டவரும் போட்டித்தன்மைக்கேற்ப சீர்திருத்தங்களை வடிவமைக்கும் விதத்தில் தற்பொழுது இடம்பெற்று வரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும்."
தூதுக்குழுவானது, பிரதம மந்திரி விக்கிரமசிங்க நிதி அமைச்சர் கருணாநாயக்கா, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குமாரசுவாமி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அலுவலர்கள் மற்றும் வியாபார சமூகத்தினரின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பன்னாட்டு பங்காளர்கள் ஆகியோரையும் சந்தித்தது.