இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 நவெம்பர் 23ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தில் அண்மைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையிற்கொண்ட பின்னர் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பொருளாதாரத்தில் கேள்வியினால் உந்தப்பட்ட ஏதேனும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இறுக்கமான நாணயக்கொள்கை நிலையினைப் பேணுவது அவசியமானதாயமைகின்ற வேளையில் பணவீக்க வீழ்ச்சி எதிர்பார்க்கைகளை மேலும் வலுப்படுத்தத் துணைபுரிந்து அதன்மூலம் முதன்மைப் பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்கு வழிநடத்துவதனை இயலச்செய்யுமென சபை குறித்துக்காட்டியது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, November 24, 2022