வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் - 2022 மே

இறக்குமதிச் செலவினம் 2022 மேயில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வீழ்ச்சியடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சுருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் மெதுவடைந்து காணப்பட்டன. தொழிலாளர் பணவனுப்பல்கள் 2022 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2022 மேயில் அதிகரித்து காணப்பட்டன. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2022 மே மாத காலப்பகுதியில் சிறியளவிலான தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் காணப்பட்ட திரவத்தன்மை அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு, காசு எல்லைத் தேவைப்பாடுகளை மத்திய வங்கி 2022 மேயில் விதித்தவேளையில், திறந்த கணக்கு மற்றும் சரக்குக் கொடுப்பனவு நியதிகள் மீதான கட்டுப்பாடு போன்றவற்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இவ் வழிமுறைகள், முறைசாரா சந்தை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தைச் செலாவணி வீதங்களுக்கிடையிலான இடைவெளியைச் சுருக்குவதற்கும் உதவி புரிந்தன. அதேவேளை, சந்தை வழிகாட்டலுடன் உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் அழுத்தங்களை நிர்வகிக்க அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் உதவியளிக்கப்பட்டு வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடிச் செலாவணி வீதமானது மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 359 ரூபாவாகக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Monday, July 11, 2022