ஏற்றுமதி பெறுகைகளை மாற்றுதல் தொடர்பில் மத்திய வங்கி புதிய விதிகளை வழங்கியுள்ளது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏற்கனவே காணப்படுகின்ற விதிகளை நீக்கி ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு அனுப்புதல் அத்துடன் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் 2021 ஒத்தோபர் 28ஆம் திகதியிடப்பட்ட 2251/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டவாறு புதிய விதிகளை வழங்கியுள்ளது. புதிய விதிகள் இலங்கையில் பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதி செய்கின்ற இருசாராருக்கும் ஏற்புடையதாகும். 

பின்வரும் அதிகாரமளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை நிறைவேற்றுவதன் மீது எஞ்சியுள்ளவற்றை (கிடைக்கப்பெற்ற அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளின் எஞ்சியிருக்கும் மீதியினை) தொடர்ந்துவருகின்ற மாதத்தின் ஏழாவது (7ஆவது) நாளன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு ஏற்றுமதியாளர்களை இவ்விதிகள் வேண்டுகின்றன.

    1. நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வெளிமுக பணவனுப்பல்கள்; 
    2. அனுமதிக்கப்பட்டவாறானவெளிநாட்டுநாணயத்தாள்களில்மீளெடுப்பு
    3. வெளிநாட்டுநாணயப்படுகடன்தீர்ப்பனவுச்செலவுகள்அத்துடன்மீள்கொடுப்பனவு
    4. ஒரு மாத கடமைப்பொறுப்புகள் உள்ளடங்கலாக பொருட்களைக் கொள்வனவுசெய்தல் மற்றும் பணிகளைப் பெற்றுக்கொள்ளல்
    5. அவ்வாறு கிடைக்கப்பெற்ற ஏற்றுமதிப் பெறுகைகளின் பத்து சதவீதம்  (10%) வரை வெளிநாட்டு நாணயத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பிலான     கொடுப்பனவுகள். 

அதற்கமைய, இவ்விதிகள் வழங்கப்பட்டதன் மூலம் தமது ஏற்றுமதிப் பெறுகைகளில் இருந்து பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகள் தொடர்பிலான அனைத்து செலவினத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு இயலுமானதாகவிருக்கும்.  

மேற்குறித்தவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களை www.dfe.lk என்ற இணையத்தளத்தின் பிரவேசிப்பதன் மூலம் 2021 ஒத்தோபர் 28 ஆம் திகதியிடப்பட்ட 2251/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டவாறான "2021ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல் விதிகள்" ஐப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

முழுவடிவம்

 

Published Date: 

Friday, October 29, 2021