இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு – 2017 மே

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மே மாதத்தில் 57.9 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன், இது 2017 ஏப்பிறல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.1 சுட்டெண் புள்ளிகள் கொண்ட அதிகரிப்பாகும். இது 2017 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் மீட்சியடைந்தமையினை குறித்துக்காட்டுவதுடன் 2017 ஏப்பிறலில் அவதானிக்கப்பட்ட பருவகால சுருக்கத்தினை தொடர்ந்து உற்பத்தி மற்றும் புதிய கடட் ளைகள் துணைச்சுட்டெண்களின் விரிவாக்கம் பெரிதும் காரணமாக அமைந்தது. மேலும், தொழில்நிலை துணைச்சுட்டெண்ணினை தவிர கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்தன. எவ்வாறாயினும், மாதத்தின் 25ம் நாள் தொடக்கம் உணரப்பட்ட பாதகமான காலநிலை நிலைமைகளால் உருவாகிய  தொழிலாளர் வரவின்மை மற்றும் நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தின் அளவு காரணமாக, நடவடிக்கைகளில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சியினை மெதுவடைய செய்தது. இருப்பினும்கூட, நடவடிக்கைகளின் எதிர்பார்ப்பு அடுத்த மூன்று மாதங்களுக்கான ஒரு மேம்பாடோன்றினை எடுத்துக்காட்டியது. 

பணிகள் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2017 ஏப்பிறலில் 54.2 சுட்டெண் புள்ளியிலிருந்து மே மாதத்தில் 55.3 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்தது. பணிகள் துறையில் ஏற்பட்ட இவ் மிதமான அதிகரிப்பிற்கு புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் தொழில்நிலை போன்றன ஆதரவளித்தன. தொழில்நிலையில் ஏப்பிரல் 2017ல் ஏற்பட்ட சுருக்கத்தினை தொடர்ந்து மேயில் ஒரு மீட்சியினை அவதானிக்க கூடியதாக இருந்தது. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகள், பாதகமான காலநிலை நிலைமைகள் மற்றும் குறிப்பிட்ட துணைத்துறைகளில் காணப்பட்ட உச்ச மற்றும் பண்டிகை பருவக்காலங்களின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்தமை போன்ற காரணங்களினால் மெதுவடைந்து காணப்பட்டது. நிலுவையிலுள்ள பணிகள் குறைவடைந்து, அளவீடு ஆரம்பித்ததிலிருந்து அவதானிக்கப்பட்ட போக்கினை தொடர்ந்திருந்தது. விதிக்கப்பட்ட விலைகள் ஏப்பிரல் 2017 உடன் ஒப்பிடுகையில் குறைவடைந்த கேள்வி காரணமாக மே 2017ல் குறைவடைந்திருந்தது. இதேவேளையில், தொழிலாளர் செலவிற்கான எதிர்பார்ப்புகளும் ஏப்பிரலில் ஒன்றுசேர்ந்த ஆண்டிற்கான அதிகரிப்பினை தொடர்ந்து மே 2017ல் மிதமடைந்திருந்தது.

முழுவடிவம்

Published Date: 

Thursday, June 15, 2017