நடைமுறைக் கணக்கில் கலப்பான செயலாற்றமொன்று எடுத்துக்காட்டப்பட்டமைக்கிடையிலும், சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட உட்பாய்ச்சல்களின் காரணமாக 2018 ஏப்பிறலில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுப்பெற்றது. நிதியியல் கணக்கிற்கான உயர்நத் உட்பாய்ச்சல்கள், குறிப்பாக 12ஆவது நாட்டிற்கான பன்னாட்டு முறியின் வழங்கலின் பெறுகைகள் செயற்றிட்டக் கடன்கள் வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவிற்கான கடன்கள் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மற்றும் அரச பிணையங்கள் சந்தையில் காணப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் என்பன மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2018 இறுதியில் ஐ.அ.டொலர் 9.9 பில்லியன் கொண்ட வரலாற்றிலே மிக உயர்நத் மட்டமொன்றினை அடைவதற்கு வழிவகுத்தன. இறக்குமதிச் செலவினங்கள் உயர்நத் வேகத்தில் அதிகரித்த வேளையில் ஏற்றுமதி வருவாய்கள் தொடர்ந்தும் குறைவடைந்தமையின் காரணமாக நடைமுறைக்கணக்கு நியதிகளில், வர்தத்கப் பற்றாக்குறை 2018 ஏப்பிறலில் விரிவடைந்தது. எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருவாய்களும் தொழிலாளர் பணவனுப்பல்களும் இம்மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் ஆரோக்கியமான வளர்ச்சியொன்றினைக் கொண்டிருந்தன.