தேசமான்ய சுனில் மென்டிஸ் (2004 – 2006)
தேசமான்ய சுனில் மென்டிஸ் மத்திய வங்கியின் பதினொராவது ஆளுநராக 2004 யூலையில் பதவியேற்றுக் கொண்டதுடன் 2006 யூனில் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். தேசமான்ய சுனில் மென்டிஸ், கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றதுடன் சான்றுபடுத்தப்பட்ட நிறுவனக் கணக்காளா்கள் அமைப்பின் (ஐக்கிய இராச்சியம்) தொழில்சாா் 1 - 3 பரீட்சைப் பிாிவுகளையும் நிறைவு செய்துள்ளாா். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்கு முன்னர் 42 ஆண்டுகளாக அவர் பணிபுரிந்த கம்பனியான ஹேலீஸ் குறூப் ஒவ் கம்பனிகளின் தலைவராகவும் முதன்மை நிறைவேற்று அலுவலராகவும் பணியாற்றினார். ஹேலீஸ் குறூப் பெறுமதிசேர்க்கப்பட்ட ஏற்றுமதிகள், இறக்குமதிகள், கப்பற்படுத்தல், பெருந்தோட்டம், வேளாண்மை மற்றும் பொழுதுபோக்கு என்பனவற்றில் ஈடுபட்ட மிகப் பாரியதும் மிகப் பழையதுமான பல் குழுமக் கம்பனியொன்றாகும்.
தேசமான்ய சுனில் மென்டிஸ் இலங்கையிலுள்ள 100இற்கு மேற்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சபைகளிலும் அதேபோன்று 7 பன்னாட்டு கம்பனிகளிலும் பணிபுரிந்திருக்கின்றார். 1994 – 2004 காலப்பகுதியில் அவர் இலங்கை வங்கியின் பணிப்பாளராக விளங்கினார். இவர் 1997 – 2000 மற்றும் 2002 – 2004 காலப்பகுதியில் தனியார் துறை உட்கட்டமைப்பு அபிவிருத்திக் கம்பனியினதும் 1995 – 2001 வரை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினதும் 1994இல் இலங்கை முதலீட்டுச் சபையினதும் 1998 – 2004இல் ஐக்கிய அமெரிக்கா - இலங்கை புல்பிறைட் ஆணைக்குழு என்பனவற்றின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2004 – 2005இல் இவர் கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தினது பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய ஆணைக்குழுவிலும் நிதி ஆணைக்குழுவிலும் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தேசமான்ய சுனில் மென்டிஸ் இலங்கை அரசாங்கத்திற்கான நாட்டிற்கான தரமிடலைப் பெற்றுக் கொள்வதற்கான நாட்டிற்கான தரமிடல் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கின்றார்.
தேசமான்ய விருது இவருக்கு 2005இல் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.