அஜித் நிவாட் கப்ரால்
முன்னாள் ஆளுநா் (2006 – 2015, 2021 - 2022)
அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் பன்னிரண்டாவது ஆளுநராக 2006 யூலையிலிருந்து 2015 சனவாி வரையும் இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக 2021 செத்தெம்பா் 15 தொடக்கம் 2022 ஏப்பிறல் 04 வரையும் பதவி வகித்தாா். இறுதி நியமனத்திற்கு முன்னா் இவா் 2020 ஓகத்து 12 தொடக்கம் பண மற்றும் மூலதனச் சந்தை அத்துடன் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்புகள் இராஜாங்க அமைச்சராகவிருந்தாா். இவா் 2019 நவெம்பா் தொடக்கம் 2020 ஓகத்து வரை பொருளாதார விவகாரங்கள் மீது பிரத அமைச்சருக்கு மூத்த ஆலோசகராகவும் இருந்தாா்.
அவரது முதல் பதவிக்காலத்தின் போது வகித்த பதவிகள்:
- பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று ஆளுநர்
- தென்கிழக்கு ஆசிய மத்திய வங்கிகளின் (SEACEN) ஆளுநர்கள் சபையின் தலைவர்
- சார்க் நாடுகள் மத்திய வங்கி ஆளுநர்கள் மன்றத்தின் தலைவர்.
இவர் தொழில் ரீதியாக பட்டயக் கணக்காளரும் இலங்கையின் மிகவும் வயது குறைந்த பட்டயக் கணக்காளின் ஒருவராகவும் தகைமைபெற்றுள்ள அதேவேளை பட்டயக் கணக்காளர் பரீட்சைகளில் பல பரிசில்களையும் வென்றுள்ளார்.
ஆளுநராக அவர் பணியாற்றிய காலப்பகுதியின் போது அவர் மொத்த உள்நாட்டு உற்பத்தியினை ஐ.அ.டொலர் 24 பில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 79 பில்லியனாகவும் பாதுகாப்பான, உறுதியான அத்துடன் துரிதமாக வளர்ச்சியடைகின்ற நடுத்தர வருமான வளர்ந்துவரும் சந்தைத் தேசமாக விளங்குவதற்கும் இலங்கைப் பொருளாதாரத்தினை மாற்றம்பெறச் செய்துள்ளார். இவர் பல பாரிய தேவைக்குமதிகமாக கோரிக்கைவிடுத்த நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கல்களுக்கும் தலைமைத்துவம் வழங்கியுள்ளார். ஆளுநர் கப்ராலின் வழிகாட்டலின் கீழ் குறைந்த மட்டத்தின் கீழ் பணவீக்கத்தினை உட்படுத்தி மோசமான உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் குழப்பம் நிறைந்த காலத்தில் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை எய்தி ஆற்றல்வாய்ந்த மற்றும் உறுதியான பேரண்டப் பொருளாதார அடிப்படையினை இலங்கை பேணக்கூடியதாகவிருந்தது.
கப்ரால், பொருளாதார விவகாரங்கள் மீதான சனாதிபதி ஆலோசகராகவும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டதுடன் அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டத்தினை உருவாக்குவதில் நெருங்கிப் பணியாற்றினார். இவர் உபாய ரீதியான தொழில்முயற்சிகள் முகாமைத்துவ முகவராண்மை சபையில் பணியாற்றியதுடன் 2006 பெப்புருவரியில் தமிஈழ விடுதலைப் புலிகளுடனான ஜெனிவா பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அரசாங்கக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
அவரது அரச நியமனங்களுக்கு முன்னர் கப்ரால் தொழில் மறுசீரமைப்பு மற்றும் தொழில்களை நிதியில் ரீதியாதக மீட்டெடுத்தல், திட்டமிடல் மற்றும் நிறுவன ஆளுகை போன்றவற்றில் விசேடத்துவம்பெற்ற ஆலோசகர் ஒருவராகவும் தொழிற்பட்டார். இவர் இலங்கை பட்டாயக் கணக்காளர்கள் நிறுவனத்தினதும் தெற்காசிய கணக்காளர் சம்மேளனத்தினதும் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கப்ரால் 2000ஆம் ஆண்டின் பல் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் ஏயிசன்ஹோவர் சகஉறுப்பினர் ஒருவராகவிருந்தார். 1997 தொடக்கம் 1999 வரை புனித பேதுரு கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவராகப் பணியாற்றிய அதேவேளை 2019இல் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் அவர் ஆற்றிய உன்னத சேவைகளுக்காக அவருக்கு “தேச கீர்த்தி லங்கா புத்ர” பட்டம் இராமான்ய மஹா நிக்கயா மூலம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஆளுநர் கப்ரால் “Towards a Sri Lankan Renaissance” (2002), "ලක් මවට මුතු පොටක්" (2004), மற்றும் "The Great Bondscam Cover-up" (2019) ஆகிய புத்தகங்களின் நூலாசிரியர் ஆவார்.
இவர் பேரார்வமிக்க வாசகரும் சொல்வளமிக்க பேச்சாளருமாவதுடன் பல தனித்துவமிக்க சிந்தனைகளையும் அனுபவங்களையும் பெற்றவர் ஆவார்.