முனைவர். சி. அமரசேகர
மூத்த துணை ஆளுநர்
முனைவர் அமரசேகர இலங்கை மத்திய வங்கியில் 23 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றியுள்ளார். மூத்த துணை ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னா் இவா் துணை ஆளுநா் மற்றும் உதவி ஆளுநா் பதவிகளை வகித்துள்ளாா். இவா் நாணயக் கொள்கைச் சபையின் செயலாளராகவும் இருந்தாா்.
2022 சனவாி - 2024 பெப்பருவரி காலப்பகுதியில் முனைவர் அமரசேகர இலங்கை, இந்தியா, வங்காளதேசம் மற்றும் பூட்டான் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக ஐக்கிய அமெரிக்காவின் வொசிங்கடன் டீ சி நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நாணய நிதியத்திற்கு இலங்கை மத்திய வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இவா் பன்னாட்டு நாணய நிதியத்தில் அவரது கடமையினைத் தொடங்குவதற்கு முன்னா் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளராகவிருந்தாா்.
இவா் தற்போது இலங்கை வங்கியாளர்கள் நிறுவகத்தின் தலைவராகவும் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கின்றாா் இவா் முன்னா் கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் ஆளுர்கள் சபை, ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிலையம் மற்றும் இலங்கை ஏற்றுமதிக் கொடுகடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் உறுப்பினராகவும் இருந்தாா். இவர் தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையத்தின் நிறைவேற்று குழு உறுப்பினரொருவருமாவார்.
முனைவர் அமரசேகர நாணயக் கொள்கை மற்றும் பேரண்ட பொருளாதார ஆராய்ச்சி என்பவற்றில் விசேடத்துவம் பெற்றுள்ளதுடன் நாணயக் கொள்கை மற்றும் வேறு மத்திய வங்கித்தொழில் கருப்பொருட்கள் மீதான அவரது ஆராய்ச்சி பல பன்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டு பரந்தளவில் அங்கீகாிக்கப்பட்டு மேற்கோள்காட்டப்படுகின்றது.
2015-2020 வரையான காலப்பகுதியில், இவர் மத்திய வங்கி சஞ்சிகையின் அலுவலர் ஆய்வுத் தொடர்களின் பதிப்பாசிரியராகவிருந்தார். பல்வேறு பல்கலைக்கழகங்கள், இலங்கை வங்கியாளா்கள் நிறுவகம், வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம், பண்டாரநாயக்க சா்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் என்பன உள்ளடங்கலாக பல்வேறு கல்விசாா் மற்றும் தொழில்சாா் நிறுவனங்களில் அதிதி விாிவுரையாளா், பரீட்சகா், வினாடிவினா நடத்துபவா் போன்றவற்றில் தன்னாா்வமாக ஈடுபட்டுள்ளாா்.
முனைவர் அமரசேகர ஐக்கிய இராச்சியத்தில் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளியலில் முனைவர் பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தில் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்திலிருந்து திறமைச் சித்தியுடன் பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து முதல் வகுப்பு கௌரவத்துடன் பொருளியலில் கலைமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் சட்டத்தரணியொருவருமாவார்.








