2024.09.23ஆம் தினம் அரசாங்கத்தினால் விசேட பொது விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார் என்பதனைக் குறிப்பிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் மூலம் வழங்கப்பட்ட 2024.09.21ஆம் திகதியின் விசேட ஊடக அறிக்கையுடன் இது தொடர்புடையது.
எவ்வாறாயினும், 2024.09.23 (திங்கட்கிழமை) வங்கி விடுமுறையொன்றல்ல என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார்.
Published Date:
Sunday, September 22, 2024