2018ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

இவ்வாண்டுப்பகுதியில் காணப்பட்ட தாழ்ந்த பணவீக்க சூழலுக்கிடையிலும் உண்மை பொருளாதார நடவடிக்கைகளில் காணப்பட்ட மிதமான விரிவாக்கத்துடன் உலகளாவிய மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களினால் இலங்கைப் பொருளாதாரத்தின் பாதிக்கப்படக்கூடியதன்மை 2018இல் அதிகளவிற்குப் புலனாகக் கூடியதொன்றாகவிருந்தது. 2018இல் உண்மை மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி முன்னைய ஆண்டின் 3.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 3.2 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சிக்கு 4.7 சதவீதத்தினால் விரிவடைந்த பணிகள் நடவடிக்கைகளும் 4.8 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்த வேளாண்மை நடவடிக்கைகளில் ஏற்பட்ட மீட்சியும் பெருமளவிற்கு ஆதரவாக அமைந்தன. கட்டடவாக்கம் சுருக்கமடைந்தமையின் முக்கிய விளைவாக இவ்வாண்டுப்பகுதியில் கைத்தொழில் நடவடிக்கைகள் 0.9 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவடைந்தன. செலவின அணுகுமுறையின்படி, நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவினம் இரண்டும் வளர்ச்சிக்கு ஆதரவளித்தன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக முதலீடு முன்னைய ஆண்டின் 28.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018இல் 28.6 சதவீதமாக விளங்கிய வேளையில் சேமிப்பு - முதலீட்டு இடைவெளி இவ்வாண்டுப்பகுதியில் விரிவடைந்து, பற்றாக்குறையினை நிரப்புவதற்கு வெளிநாட்டு மூலவளங்களின் மீது அதிகளவில் தங்கியிருப்பதனை எடுத்துக்காட்டியது. இலங்கைப் பொருளாதாரத்தின் மொத்த அளவு ஐ.அ.டொலர் 88.9 பில்லியனில் மதிப்பிடப்பட்ட வேளையில் தலைக்குரிய மொ.உ.உற்பத்தி 2018இல் ஐ.அ.டொலர் 4,102 இல் பதிவுசெய்யப்பட்டது. இது முன்னைய ஆண்டினைவிடச் சிறிதளவு குறைவானதாகும். இவ்வாண்டுப்பகுதியில் பொருளாதார நடவடிக்கையில் மிதமான வளர்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் தொழிலின்மை வீதத்தில் சிறிதளவு அதிகரிப்பும் தொழிற்படைப் பங்கேற்பு வீதத்தில் வீழ்ச்சியும் அவதானிக்கப்பட்டன.

முழுவடிவம்

Published Date: 

Thursday, April 25, 2019