2019 மேயில் வெளிநாட்டுத் துறை, வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட சுருக்கத்தின் உதவியுடன் ஒப்பீட்டு ரீதியில் உறுதியானதாக விளங்கியது.
2019 மேயில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 மேயின் ஐ.அ.டொலர் 933 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 823 மில்லியனுக்கு குறுக்கமடைந்தது.
2019 மேயில் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு, இறக்குமதிச் செலவினம் 3.9 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையும் (ஆண்டுக்கு ஆண்டு) ஏற்றுமதி வருவாய்கள் 4.0 சதவீதத்தினால் (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்தமையும் காரணங்களாக விளங்கின.
மேயில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 70.8 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்து (ஆண்டுக்கு ஆண்டு) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் தாக்கத்தினைப் பிரதிபலித்தது. எனினும், 2019 மே உடன் ஒப்பிடுகையில் யூனில் சுற்றுலாப் பயணிகளினது வருகைகளின் எண்ணிக்கை பெரும்பாலும் இருமடங்காகியதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
2019 மேயில் தொழிலாளர் பணவனுப்பல்கள் ஐ.அ.டொலர் 562 மில்லியனாக விளங்கி (ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில்) 3.1 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. ஒன்றுசேர்ந்த அடிப்படையில், தொழிலாளர் பணவனுப்பல்கள் 2019 முதல் ஐந்து மாதகாலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2,733 மில்லியன்களாக விளங்கின.