வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 சனவாி

கடந்த சில மாதங்களில் அவதானிக்கப்பட்டவாறு, வர்த்தகப் பற்றாக்குறை 2019 சனவரியில் தொடர்ந்தும் அதன் மேம்பட்ட போக்கினைக் கொண்டிருந்தது. 2018 திசெம்பரின் ஐ.அ.டொலர் 701 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடனும் 2018 சனவரியின் ஐ.அ.டொலர் 1,049 மில்லியன் கொண்ட பற்றாக்குறையுடனும் ஒப்பிடுகையில், இம்மாத காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 617 மில்லியன் கொண்ட வர்த்தகப் பற்றாக்குறையொன்று பதிவுசெய்யப்பட்டது. 

வர்த்தகப் பற்றாக்குறையில் காணப்பட்ட இக்குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு ஏற்றுமதிகளிலிருந்தான உயர்ந்த வருவாய்களினதும் இறக்குமதிச் செலவினத்தில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினதும் இணைந்த தாக்கமே காரணமாகும். 2019 சனவரியில் ஏற்றுமதிகள் 7.5 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தவேளையில் இறக்குமதிகள் 17.8 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன.

2019 சனவரியில் சுற்றுலாவருகைகள் 2.2 சதவீதத்தினால் (ஆண்டிற்குஆண்டு) அதிகரித்தமையின் மூலம் இம்மாதகாலப்பகுதியில் ஐ.அ.டொலர் 458 மில்லியன் கொண்ட வருவாய்களைத் தோற்றுவித்தது.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, April 17, 2019