2024இன் முதலாவது அரையாண்டில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது சிறியளவு உயர்வான வர்த்தகப் பற்றாக்குறையொன்றிற்கு மத்தியில் தொழிலாளர் பணவனுப்பல்களிற்கான உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்களுடன் நேர்க்கணியமாக தொடர்ந்தும் காணப்பட்டது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது (ஆண்டிற்காண்டு) 2024 மேயுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தபோதிலும் 2024 யூனில் விரிவடைந்தது காணப்பட்டது.
பணிகள் துறை உட்பாய்ச்சல்கள் (சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் நீங்கலாக) 2023 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1,561 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024இன் அதே காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,762 மில்லியனாக விளங்கின.
தொழிலாளர் பணவனுப்பல்கள் 2023 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 2,823 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 3,144 மில்லியனிற்கு அதிகரித்தன.
சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் 2023 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 875 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,557 மில்லியனாக விளங்கின.
அரச பிணையங்கள் சந்தையிலிருந்தான வெளிநாட்டு முதலீட்டு வெளிப்பாய்ச்சல்கள் 2024 யூனில் தொடர்ந்தன.
மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2024 யூன் இறுதியில் ஐ.அ.டொலர் 5.7 பில்லியனாக விளங்கியது.
இலங்கை ரூபாவானது ஐக்கிய அமெரிக்க டொலரிற்கெதிராக 2024 யூன் இறுதி வரையான ஆண்டு காலப்பகுதியில் தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டது.
கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2024 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்தன.