2019 மாச்சு 27இல் இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 இல் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயக் கட்டிடத்திலுள்ள தரைத்தள காசுக் கரும பீடங்களில் ஒரு கருமபீடத்தினைப் பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகளை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கி திறந்துவைக்கின்றது.
இக்கருமபீடமானது, அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தவிர்ந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் மு.ப 11.00 மணிவரை பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
நாணயக் குற்றிகளானது, ஒவ்வொன்றும் 100 எண்ணிக்கைகள் கொண்ட பக்கற்றுக்களில் வழங்கப்படுமென்பதுடன் ஒரே நேரத்தில் குறைந்தளவு ஒரே முகப்பெறுமதியிலிருந்து 100 குற்றிகளைக் கொண்ட ஒரு பக்கற்றேனும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும். இக்கருமபீடத்திலிருந்து ஒரே நேரத்தில் ஒரு தனிநபரினால் பெற்றுக்கொள்ளக்கூடிய ரூ.1/=,ரூ.2/=, ரூ.5/=, ரூ.10/= போன்ற ஏதாகிலும் முகப்பெறுமதியிலிருந்து உயர்ந்தபட்சப் பெறுமதி ரூ.20,000 ஆகும்.
ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் மொத்தமாக நாணயக் குற்றிகளை பெற்றுக்கொள்ள விரும்புமிடத்து அதற்கான விண்ணப்பப்படிவத்தினை, பெற்றுக்கொள்ளும் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாணயத் திணைக்களத்தின் கண்காணிப்பாளரிடம் கையளிக்க வேண்டும்.
குறிப்பிட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுறுத்தல் படிவத்தினை நாணயத் திணைக்களத்தின் காசுக் கருமபீடத்தில் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் www.cbsl.gov.lk எனும் வெப்தளத்திலும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.