கொழும்பிலுள்ள அதிகாரிகளுடனும் வாசிங்டன் டீசியில் வசந்தகால குழுமங்களின்போதிலும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் தூதுக்குழுவிற்கான தலைவர் பின்வருமாறான அறிக்கையை வெளியிட்டார்:
'விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஒழுங்கினால் ஆதரவளக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்குக் கீழான நான்காவது மீள்hய்வு பற்றி இலங்கை அதிகாரிகளுடன் ஓர் அலுவலர் மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது. அதிகாரிகள் வெற்றிகரமாக இறைத் திரட்சியை முன்னெடுத்ததாலும் பன்னாட்டு ஒதுக்குகளை வலுபடுத்தியதனாலும் நிகழ்ச்சித்திட்டத்திற்குக் கீழான சகல திசெம்பர்-இறுதி அளவுசார்ந்த செயலாற்றப் பிரமாணங்களை பூர்த்திசெய்தது. உணவு விலைகளிலான வானிலை சார்ந்த அதிகரிப்பினால், திசெம்பரிற்கான உள் எல்லையின் மேல் எல்லையை பணவீக்கம் விஞ்சினாலும், அதன் பின்னர் உள் எல்லையிற்குள் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. சில காலதாமதங்கள் இருந்தபோதிலும், இந்த மீளாய்விற்கு பூர்த்தியாகாத சகல அமைப்பியல் அடித்தள அளவு குறியீடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்."
'வானிலை தொடர்புடைய அதிர்வுகளின் தொடரும் பாதிப்புக்களினால் 2017இல் காணப்பட்ட மிதமான வளர்ச்சிக்குப் பின்னர் வேளாண்மை மீளுயர தொடங்கி உணவு விலைகள் மிதமடைந்ததால் ஓர் மீட்சி தற்போது நடைபெறுகிறது. உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2018 இல் 4 வீதத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் பணவீக்கம் 5 சதவீதத்திற்கு கீழாக தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதிகளும் தேறுவதுடன் அண்மையான பன்னாட்டிற்கான முறிகளின் வழங்கல் என்பது வெற்றிகரமாக மேலதிகமாக விற்பனைசெய்யப்பட்டது. இருப்பினும், தொடர்ந்தும் கணிசமாக காணப்படும் பொதுப் படுகடன், பாரிய மீள்நிதியிடல் தேவைப்பாடுகள் மற்றும் குறைந்த வெளிநாட்டுத்துறை தாங்கிருப்புக்களை கருத்திற்கொண்டால் எதிர்கணியமான அதிர்வுகளால் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் தொடர்ந்துமுள்ளது."