பணம் தூயதாக்குதல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் கட்டமைப்பு மீதான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு அண்மைய எதிர்காலத்தில் தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரவிருக்கும் இப்பரஸ்பர மதிப்பீட்டின் போது நிதியியல் நடவடிக்கைச் செயலணியின் (பணம் தூயதாக்கலுக்கெதிரான/பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் மீதான உலகளாவிய கொள்கையை நிர்ணயிக்கும் அமைப்பு) 40 பரிந்துரைகளுடனான தொழில்நுட்ப ரீதியான இணங்குவித்தலையும் 11 உடனடிப் பெறுபேறுக;டான அவற்றின் செயல்திறன்வாய்ந்த நடைமுறைப்படுத்தலையும் எடுத்துக்காட்டுவதற்கு இலங்கை வேண்டப்பட்டுள்ளது.
Published Date:
Monday, February 10, 2025