நாணயக் கொள்கை மீளாய்வு - இல.2 - 2018

பணவீக்கம் மற்றும் பணவீக்கத் தோற்றப்பாட்டின் சாதகமான அபிவிருத்திகள் அதேபோன்று உண்மையான மற்றும் உத்தேசிக்கப்பட்ட மொ.உ. உற்பத்தி வளர்ச்சியில் தற்போதுள்ள இடைவெளியினை விரிவடையச் செய்த எதிர்பார்க்கப்பட்டதனை விட தாழ்ந்த உண்மை மொ.உ. உற்பத்தி வளர்ச்சி என்பனவற்றினைக் கருத்தில் கொண்டு, நாணயச் சபை 2018 ஏப்பிறல் 03இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீத வீச்சின் மேல் எல்லையான துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்குத் தீர்மானித்தது. இந்தத் தீர்மானம் கடந்த அண்மைக் காலத்தில் உள்நாட்டுச் சந்தை வட்டி வீதங்களில் அவதானிக்கப்பட்ட தளம்பலினைக் குறைவடையச் செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாணயச் சபையின் துணைநில் கடன்வழங்கல் வீதத்தினைக் குறைப்பதற்கான தீர்மானம் பின்வரும் பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளினை அடிப்படையாகக் கொண்டது:

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிகமான மதிப்பீடுகளின்படி, 2017இல் இலங்கைப் பொருளாதாரம் 2016இல் 4.5 சதவீத (ஆண்டுக்காண்டு) வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 3.1 சதவீத (ஆண்டுக்காண்டு) வளர்ச்சியைப் பதிவுசெய்தமையின் மூலம் அதன் செயலாற்றம் தாழ்வாகயிருந்தது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கையின் தளர்த்தல் வழிமுறை மந்தமான அண்மைக்கால வளர்ச்சித் தோற்றபாடுகளை தீர்க்குமென எதிர்பார்க்கப்படுவதுடன், நடுத்தரக் காலத்தில் ஓர் நிலைத்திருக்கக்கூடிய உயர்ந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி பொருளாதாரத்தை நகர்த்துவதற்கு திட்டமிடப்பட்ட அமைப்பியில் சீர்த்திருத்தங்களை தாமதமின்றி மேற்கொள்வது அவசியமாகும்.

உணவுச் சார்ந்த பணவீக்கத்தில் காணப்பட்ட தொடர்ச்சியான மெதுவடைதலுடன் சேர்ந்த சாதகமான தளத் தாக்கம் என்பவற்றினால், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013 = 100) அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் 2018 மார்ச்சில் மேலும் மெதுவடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சட்டெண்ணிலும் 2018 இன் முதல் இரண்டு மாதங்களில் இதுபோன்ற ஓர் கீழ்நோக்கிய அசைவு அவதானிக்கப்பட்டுள்ளது. இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு பதிலிறுத்தும் வகையில் மையப் பணவீக்கமானது நடு ஒற்றை இலக்க மட்டங்களுக்கு கீழாகக் தொடர்ந்தும் காணப்பட்ட வேளையில் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உறுதியாகப் பேணப்பட்டன. இவ்வபிவிருத்திகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் அண்மைக் காலத்தில் பணவீக்கத்தின் மீது சாத்தியமான நிர்வகிக்கப்பட்ட விலைத்திருத்தங்களிலிருந்து தோன்றக்கூடிய தாக்கத்தை கருத்திற்கொண்டதற்குப் பின்னரும், 2018இல் இலக்கிடப்பட்ட மட்டங்களுக்குள்ளே முதன்மைப் பணவீக்கம் காணப்படும் என எறிவு செய்யப்படுகிறது.

வெளிநாட்டுத் துறை தொடர்பில், விலை மற்றும் அளவு அடிப்படையில் ஏற்றுமதிச் செயலாற்றம் மேம்பட்டபோதும், இறக்குமதிகளின் அதிகரிப்பு இதை விஞ்சி வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவடைதலுக்கு காரணமாகியது. இருப்பினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் மற்றும் தொழிலாளர்களின் பணவனுப்பல்களிலிருந்தான மேம்பட்ட வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் என்பன நடைமுறைக் கணக்கு மீதான தாக்கத்தை ஓரளவிற்கு மெதுவடையச் செய்தன. 2018இன் முதல் காலாண்டு பகுதியில் மிதமடைந்த பணவீக்கம் மற்றும் பெயரளவு செலாவணி வீதத்தின்; மெதுவான திருத்தம் என்பவற்றின்; ஆதரவினால், உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதச் சுட்டெண்கள் ஒரு படிப்படியான சீராக்கத்தினைப் பதிவுசெய்து, அதன் மூலம்; நாட்டின் போட்டித்தன்மைக்கு வலு சேர்த்தன. நெகிழ்ச்சித்தன்மையுடைய செலாவணி வீத முறைமையின் கீழ் மேம்பட்ட போட்டித்தன்மை எதிர்காலத்தில் வெளிநாட்டு நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறையை குறைப்பதற்கு துணைபுரியும். இருப்பினும், உலகளாவிய வட்டி வீதங்களின் அதிகரித்துச்செல்லும் போக்கென்பது வெளிநாட்டு மற்றும் இறைத் துறைகள் இரண்டிற்கும் ஓர் பிரச்சனையாக தொடாந்தும்; காணப்படுகிறது. பன்னாட்டு ஒதுக்குகளை கட்டியெழுப்புவதற்காக 2017 இன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் 1,664 மில்லியன் தேறிய வெளிநாட்டுச் செலாவணி கொள்வனவுகளுக்கு மேலதிகமாக இதுவரையான ஆண்டுப்பகுதியில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து ஐக்கிய அமெரிக்க டொலர்கள் 400 மில்லியனுக்கு அதிகமாக மத்திய வங்கியால் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்ததனால், வெளிநாட்டு அலுவல்சார் ஒதுக்குகளின் கடனல்லாத பகுதியை மேமபடுத்தி வெளிநாட்டுத்துறை சார்ந்த அதிர்ச்சிகளுக்கான பாதிப்படையக்கூடிய தன்மையை குறையச்செய்தது.

அரசாங்கத்தின் இறைத்திரட்சியினை நோக்கிய முயற்சிகளுக்கு மாறாக இறையின் விலகல்கள் 2017இல் ஒட்டுமொத்த இறைப் பற்றாக்குறை அதன் உத்தேசிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்லக் காரணமாயிற்று. எனினும், வரியிறைச் சேகரிப்பிலும் நடைமுறைச் செலவிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டு அரசாங்கமானது 2017இல் ஒரு முதன்மை மிகையினைப் பதிவு செய்வதனையும் மொ.உ. உற்பத்தியின் சதவீதமாக கடனினை மிதமடையச் செய்வதற்கும் துணைபுரிந்தன. 2018 ஏப்பிறல் 1 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் உண்ணாட்டரசிறைச் சட்டம் அமுல்படுத்தப்படுவது அரசிறை நிருவாகத்தினை மேம்படுத்துவதற்கான ஏனைய சீர்திருத்தங்களுடன் இனிவரும் காலத்தில் இறைச் செயலாற்றத்திற்கு ஆதரவளிக்கும்.

நாணயத் துறையில், அரச துறைக்கான வங்கிகளின்; கொடுகடனின் அதிகரிப்பிற்கு மத்தியிலும் விரிந்த பணநிரம்பல் மற்றும் தனியார் துறைக்கு வழங்கவிருந்த கொடுகடனின் வளர்ச்சி போன்றவை 2018இன் முதல் இரண்டு மாதங்களில் தொடாந்தும் மெதுவானதாகவே காணப்பட்டன. பெரும்பாலான சந்தை வட்டி வீதங்கள் உயர்ந்த மட்டங்களில் உறுதியடைந்துள்ள வேளையில், வீழ்ச்சியடைந்து செல்லும் பணவீக்கத்துடன் உண்மை வட்டி வீதங்கள் ஒரு மேல் நோக்கிய போக்கினைக் குறித்துநிற்கின்றன. எனினும் அண்மையில் குறுங்காலச் சந்தை வட்டி வீதங்களில் ஒரு மிகமிஞ்சிய அதிகரிப்புக் காணப்பட்டமையினால் இந்தத் தளம்பலினைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி சரியான தொழிற்பாட்டு வழிமுறைகளை மேற்கொள்வதனைத் தேவைப்படுத்தியது.

மேற்கூறப்பட்ட அபிவிருத்திகள், மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களின் ஒரு குறைப்பினை தேவைப்படுத்துகின்றதென நாணயச் சபை கருதுகின்றது. குறிப்பாக, பணவீக்கம், பணவீக்கத் தோற்றப்பாடு என்பனவற்றில் காணப்பட்ட சாதகமான அபிவிருத்தி மற்றும் நாணயத் துறையின் போக்குகளிற்குப் பொருளாதார செயற்பாட்டின் மந்தமான செயலாற்றத்துடன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் சில தளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் காரணிகளாகவிருந்தன. இதேவேளை, உலகப் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் உள்நாட்டு இறைத் துறை அபிவிருத்திகள் மூலம் எழுகின்ற இடர்நேர்வுகள் முன்னேறிச் செல்கையில் கவனமாக அவதானிக்கப்பட வேண்டிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்கு நாணயச் சபையின் தீர்மானத்தைத் தொடர்ந்து துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் 8.50 சதவீதமாக இருக்கும் வேளையில் துணைநில் வைப்பு வசதி வீதம் தொடர்ந்தும் 7.25 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்படும். குறுகிய கொள்கை வீத வீச்சு குறைந்த தளம்பலுடன் குறுங்கால வட்டி வீதங்களினை விரும்பப்பட்ட மட்டங்களில் பேணுவதற்கு மத்திய வங்கிக்கு துணைபுரியும்.

நாணயக் கொள்கைத் தீர்மானம்
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 25 அடிப்படைப் புள்ளிகளினால் குறைக்கப்பட்டது
துணைநில் வைப்பு வசதி வீதம் 7.25%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 8.50%
நியதி ஒதுக்கு விகிதம்  7.50%

 

 

 

 

 

 

 

 

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2018 மே 11ஆம் நாள் வெளியிடப்படும்.

முழுவடிவம்

 

Published Date: 

Wednesday, April 4, 2018