“டிஜிட்டல் கொடுக்கல்வாங்கல்கள் ஊடாக எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புப் பிரசாரம் 2025 நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்களினால் 2025 சனவரி 09 அன்று அம்பாந்தோட்டை மாக்கம் ருகுணுபுர நிருவாகக் கட்டடத்தொகுதியில் தொடங்கிவைக்கப்பட்டது. இப்பிரசாரம் அம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் திரு. பிமல் இந்திரஜித் த சில்வா, நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் பணி வழங்குநர்கள் ஆகியோரின் ஆதரவுடன் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பாரிய எண்ணிக்கையிலான அரசாங்க அலுவலர்கள், நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Thursday, January 16, 2025