2008 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் வழங்குவதில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது பற்றி இலங்கை மத்திய வங்கியிடமிருந்து உடனடி அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் 2018 சனவரி 11ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் மீது கவனம் ஈர்க்கப்படுகின்றது. அதிலுள்ள இறுதிப்பந்தியானது தடயம்சார் கணக்காய்வொன்று நடாத்தப்படும் எனக் குறிப்பிடுகின்றது. இக்கணக்காய்வானது 2008 தொடக்கம் 2014 வரையான காலப்பகுதியின் போது அரசாங்கப் பிணையங்கள் மற்றும் ஊழியர் சேம நிதியத் தொழிற்பாடுகள் மீது கவனம் செலுத்தும். இது வெளித்தரப்பினர் மூலம் நடாத்தப்படும். தடயம்சார் கணக்காய்வு நிறைவுபெறுவதற்கு முன்னர் இது தொடர்பில் ஏதேனும் அறிக்கையொன்றினை வெளியிடுவது உசிதமானதல்ல.